Chandramukhi 2 :இறுதிக்கட்ட சூட்டிங்கில் சந்திரமுகி 2.. எப்ப ரிலீஸ் தெரியுமா!

சென்னை : ராகவா லாரன்ஸ் லீட் கேரக்டரில் நடித்துவரும் படம் சந்திரமுகி 2. பி வாசு படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் மைசூரு, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலையில் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் மீண்டும் மைசுருவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அப்டேட்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Actor Raghava lawrences Chandramukhi 2 movie last schedule planning in Mysuru

இறுதிக்கட்ட சூட்டிங்கில் சந்திரமுகி 2 : நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் சந்திரமுகி 2. முன்னதாக ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தை இயக்கிய பி வாசுவே இந்தப் படத்தையும் இயக்கி வருகிறார். ரஜினியின் கேரியரில் மிகச்சிறந்த படமாக அமைந்தது சந்திரமுகி. இந்தப் படத்தில் ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பும் நயன்தாராவின் பிரெஷ் லுக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மைசூரு, ஐதராபாத் போன்ற இடங்களில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படத்தின் சூட்டிங்கை எடுத்து முடித்துள்ளார் பி வாசு. இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் மைசூருவில் வரும் 17ம் தேதி துவங்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த சூட்டிங் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் இதையடுத்து பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் சூட்டிங் 10 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் அதனுடன் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே படம் வரும் விநாயகர் சதுர்த்தியையொட்டி செப்டம்பர் 15ம் தேதி ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Actor Raghava lawrences Chandramukhi 2 movie last schedule planning in Mysuru

ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவாகி வருகிறது சந்திரமுகி 2. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தப் படத்திற்கு தோட்டா தரணி கலை இயக்குநராக செயல்பட்டு வருகிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய இயக்கத்தில் நடித்துவந்த ராகவா லாரன்ஸ் இநத்ப்படத்தில் வாசு இயக்கத்தில் இணைந்துள்ளார்.

ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இந்நிலையில் சந்திரமுகி 2 படமும் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றிப் படைப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். அவருக்கு இந்தப்படம் கைக்கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X