லவ்லி ஹீரோயின்.. கங்கனாவை பாராட்டிய இயக்குநர்.. மும்பை ஷெட்யூலை நிறைவு செய்த சந்திரமுகி 2 டீம்!

மும்பை : நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் சந்திரமுகி 2.

ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்குநர் பி வாசு டைரக்ட் செய்து வருகிறார்.

ஐதராபாத், மைசூரு உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது மும்பையில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் நடைபெற்றுள்ளது.

சந்திரமுகி படம்

சந்திரமுகி படம்

நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2005ம் ஆண்டில் வெளியான சந்திரமுகி படம், சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றது. ரஜினியின் கேரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாக அமைந்த இந்தப் படத்தை இயக்குநர் பி வாசு டைரக்ட் செய்திருந்தார். இந்தப் படத்தில் ரஜினி -வடிவேலு காமெடி மிகச்சிறப்பாக அமைந்தது. பிரெஷ் லுக் நயன்தாரா, ஜோதிகாவின் மிரட்டல் நடிப்பு என ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்தது சந்திரமுகி.

சந்திரமுகி 2 படம்

சந்திரமுகி 2 படம்

இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீண்ட காலங்களாக இருந்துவந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் படத்திலும் ரஜினியே நாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக தற்போது சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், லட்சுமி மேனன் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.

மும்பை ஷெட்யூல் நிறைவு

மும்பை ஷெட்யூல் நிறைவு

படத்தின் சூட்டிங் மைசூர், ஐதராபாத் போன்ற இடங்களில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு நடத்தப்பட்ட நிலையில், அடுத்ததாக கடந்த சில தினங்களாக மும்பையில் சூட்டிங் நடத்தப்பட்டது. இதில் கங்கனா ரணாவத் இடம்பெறும் காட்சிகள் சூட் செய்யப்பட்டன. இந்நிலையில் படத்தின் மும்பை ஷெட்யூல் நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் கங்கனா, பி வாசு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற பி வாசு, கங்கனா லவ்லி ஹீரோயின் என்றும் பழகுவதற்கு இனிமையானவர் என்றும் பாராட்டினார்.

சூட்டிங்கை நிறைவு செய்த கங்கனா

சூட்டிங்கை நிறைவு செய்த கங்கனா

இதனிடையே இந்த வாய்ப்பை கொடுத்த பி வாசு உள்ளிட்டவர்களுக்கு கங்கனா தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார். படத்தில் அவரது பார்ட் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவினரை தான் மிகவும் மிஸ் செய்வேன் என்றும் படத்தின் அற்புதமான மனிதர்களை சந்தித்ததாகவும் அவர்களுடன் பயணித்ததாகவும் கங்கனா தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு குட் பை சொல்வதற்கும் மிகவும் கஷ்டமாக உள்ளதாகவும் அவர் சமூக வலைதளத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

லாரன்ஸ் குறித்து பாராட்டு

லாரன்ஸ் குறித்து பாராட்டு

படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் குறித்தும் அவரது வளர்ச்சி குறித்தும் கங்கனா பாராட்டு தெரிவித்துள்ளார். மிகச்சிறந்த இயக்குநர் மற்றும் நடிகராக அவர் உள்ளதாகவும் பாராட்டியுள்ளார். மேலும் லாரன்சுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மும்பை ஷெட்யூல் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X