Rudhran movie :முதல் நாளில் வெறித்தனம்.. இரண்டாவது நாளில் குறைந்த ருத்ரன் வசூல்!

சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீசானது ருத்ரன் படம்.

நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த இந்தப் படம் வெளியாவதில் ரிலீசுக்கு முந்தைய நாள் வரை சிக்கல் இருந்தது. இந்நிலையில் படம் திட்டமிட்டபடி சிறப்பாக ரிலீசானது.

இதையடுத்து ஆக்ஷன் த்ரில்லராக வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து முதல் நாளில் சிறப்பான வசூலை பெற்றது.

Actor Raghava lawrences Rudhran movies collections reduces in second day

லாரன்சின் ருத்ரன் பட வசூல் : நடிகர் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், சரத்குமார், காளி வெங்கட், சச்சு, உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ருத்ரன் படம் ஆக்ஷன் த்ரில்லராக வெளியாகியுள்ளது. இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை படம் திரையரங்குகளில் ரிலீசானது. படம் ரிலீசாவது குறித்து தொடர்ந்த சர்ச்சை நீடித்த நிலையில், படம் ரிலீசாவது குறித்து வியாழக்கிழமைதான் உறுதியானது.

இதையடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் படத்தை புக்கிங் செய்தனர். படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. தமிழ்நாட்டை போலவே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படத்திற்கான வரவேற்பு சிறப்பாக அமைந்தது. இதையடுத்து படம் முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்தது. தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் முதல் முறையாக இயக்கியிருந்த இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நான்கு ஆண்டுகள் கழித்து லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ருத்ரன் படம், தொடர்ந்து வசூலில் சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாரயிறுதி நாளான நேற்றைய தினம் படம் ஒட்டுமொத்தமாக 2 கோடிகள் மட்டுமே வசூலித்துள்ளது. இன்றைய தினமும் வாரயிறுதி நாளாக உள்ள நிலையில், படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோல இனிவரும் நாட்களிலும் படம் வசூல் சாதனை படைக்குமா என்பதும் தெரியவரும்.

Actor Raghava lawrences Rudhran movies collections reduces in second day

படம் வாரிசு, துணிவு, வாத்தி, பத்துதல படங்களின் வரிசையில் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களின் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த படங்களில் 5வது இடத்தில் இடம்பெற்றது. இந்நிலையில், இரண்டாவது நாளிலேயே படத்தின் வசூல் குறைந்துள்ளது, தயாரிப்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம், தமிழகத்தில் 400 திரையரங்குகளிலும் ஒட்டுமொத்தமாக 800 திரையரங்குகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் லாரன்ஸ் நடிப்பில் காஞ்சனா 3 படம் வெளியானது. இதையடுத்து 4 வருட இடைவெளியில் ருத்ரன் படம் ரிலீசாகியுள்ளது. வழக்கமான பழிவாங்கும் கதையாக வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அதிக நீளமாக எடுக்கப்பட்டு, ரசிகர்களை அதிகமாக சோதித்தது. பல இடங்களில் காஞ்சனா படத்தை பார்ப்பது போன்ற உணர்வு ரசிகர்களுக்கு ஏற்பட்டது. படம் பேய் இல்லாத காஞ்சனா என விமர்சிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X