Raghava Lawrence: அயோத்தி இயக்குநருடன் இணையும் ராகவா லாரன்ஸ்.. அட இது என்ன புது காம்போவா இருக்கே!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் நடித்து வெளியான ஜிகர்தண்டா XX மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் அடுத்தப்படத்தின் வேலைகளை ராகவா லாரன்ஸ் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான டிஸ்கஷனில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

நடிகர் ராகவா லாரன்ஸ்: நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்தடுத்து சந்திரமுகி 2, ஜிகர்தண்டா XX படங்கள் வெளியாகி சிறப்பாக அமைந்தன. சந்திரமுகி 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் வசூலில் சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து சில வாரங்களில் வெளியான ஜிகர்தண்டா XX படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. இந்தப் படத்தில் ராகவா லாரன்சின் நடிப்பு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.
லாரன்ஸ் அடுத்தப்படம்: இந்தப் படத்தை தொடர்ந்து லாரன்சின் அடுத்தப்படம் குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழுந்த நிலையில், அடுத்ததாக தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கான வேலைகளை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் இந்தப் படத்தின் டிஸ்கஷனில் அவர் தற்போது தன்னுடைய உதவியாளர்களுடன் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் காஞ்சனா படங்களின் அடுத்த பாகமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அழுத்தமான கதைக்களம்: ராகவா லாரன்ஸ் பேய்க் காமெடி படங்களில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என இந்தப் படங்களில் தன்னுடைய பன்முகம் காட்டியதுடன் காமெடி கலாட்டாக்களையும் செய்து வந்தார். இந்நிலையில் ஜிகர்தண்டா 2 படம் ராகவா லாரன்சின் நடிப்புத்திறமையை தற்போது வெளிக்காட்டியுள்ளது. இதனால் அடுத்தடுத்து இதுபோன்ற அழுத்தமான கதைக்களங்களில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
அயோத்தி பட இயக்குநருடன் கூட்டணி: இந்நிலையில் அடுத்ததாக அயோத்தி பட இயக்குநர் மந்திரமூர்த்தியுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை கோல்ட்மைல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. காமெடி களத்தில் தொடர்ந்து பயணித்துவந்த ராகவா லாரன்சிற்கு இந்தப் படத்தில் எந்த மாதிரியான கேரக்டர் அமையும் என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விரைவில் அறிவிப்பு: அடுத்ததாக தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் இணையவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மந்திரமூர்த்தி இயக்கத்தில் லாரன்ஸ் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் எந்தப் படத்தில் அவர் முதலில் நடிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முன்னதாக சசிகுமார் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கியிருந்த அயோத்தி படம் இந்த ஆண்டின் சிறந்த பட வரிசையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











