Raghava lawrence: ஜிகர்தண்டா படத்துலயே நடிக்க வாய்ப்பு கிடைச்சுது.. ராகவா லாரன்ஸ் பகிர்ந்த தகவல்!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டீசர் ஸ்டைலிஷ்ஷாக அமைந்துள்ளது.

Actor Raghava lawrence shared the secret that he got chance to Act in Jigarthanda

ஜிகர்தண்டா படத்திலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக ராகவா லாரன்ஸ் வெளிப்படை: கடந்த 2014ம் ஆண்டில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியானது ஜிகர்தண்டா படம். பாபி சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பான வெற்றியை பெற்றது. இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பாபி சிம்ஹாவிற்கு கிடைத்தது. இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் முதல் பாகத்தின் நடிகர்கள் நடிக்கவில்லை. மாறாக ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

இந்த டீசர் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக வெளியாகியுள்ளது. டேய் இது சினிமாடா என்று எஸ்ஜே கூறுவதாக காட்சி அமைப்புகள் காணப்படுகின்றன. முதல் பாகத்திலேயே சினிமா எடுப்பதாக காட்சிகள் அமைந்திருந்த நிலையில், இந்தப் படத்திலும் அதே கதைக்களத்தில்தான் கார்த்திக் சுப்புராஜ் பயணித்துள்ளதாக தெரிகிறது. எஸ்ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் வித்தியாசமான கெட்டப்பில் காணப்படுகின்றனர். படம் பீரியட் படமாக வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து தற்போது பேசியுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், முதல் பாகத்திலேயே பாபி சிம்ஹாவின் கேரக்டரில் நடிக்க தன்னை கார்த்திக் சுப்புராஜ் அணுகியதாகவும் ஆனால் அந்த நேரத்தில் மற்ற படங்களில் பிசியாக நடித்து வந்ததால் தன்னால் நடிக்க முடியாமல் போனதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது இரண்டாவது பாகத்திற்கும் கார்த்திக் சுப்புராஜ் தன்னை அணுகிய நிலையில், தற்போது படத்தில் தான் நடித்து முடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் ட்ரெண்டியாகவும் ஸ்டைலிஷ்ஷாகவும் வந்துள்ளதாக தெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ், இந்தப் படம் அனைவரையும் கவரும் வகையில் அமையும் என்றும் கூறியுள்ளார். ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா கேரக்டர் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அசால்ட் சேது கேரக்டரில் அவர் அதிரடி காட்டியிருந்தார். அவருக்கு தேசிய விருதையும் இந்த கேரக்டர் பெற்றுத் தந்த நிலையில், இந்த கேரக்டருக்காக முதன்முதலில் ராகவா லாரன்ஸ் அணுகப்பட்டது தற்போது வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X