சொன்னதை செய்த லாரன்ஸ்..அதிமுகவுடன் புதிய கூட்டணி.. அமைச்சருடன் திடீர் சந்திப்பு!
மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக நடிகர் ராகவா லாரன்ஸ், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்து, நடிகர் ராகவா லாரன்ஸ் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமைகளுடன் கலக்கிக்கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். தாய் மீது அதிக பாசம் கொண்ட ராகவா லாரன்ஸ், அவருக்கு கோயில் கட்டி வழிப்பட்டு வருகிறார். மேலும் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ராகவா லாரன்ஸ் தனது விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதாவது, " என்னிடன் நிறைய பேர் உதவி கேட்டு வருகிறார்கள். என்னால் முடிந்த அளவுக்கு நான் அவர்களுக்கு உதவுகிறேன். எந்த பதிவையும் நான் புறக்கணிப்பது இல்லை.
நிறைய பேர் என்னிடம் உதவிக்கேட்டு வரும் போது, தனி மனிதனாக என்னால் அனைத்தையும் செய்ய முடியவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நான் அரசாங்கத்தின் உதவியை நாட முயற்சிக்கிறேன்.
முந்தைய காலங்களில் மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரை சந்தித்து உதவி கேட்டிருக்கிறேன். அவர்களும் தட்டாமல் நான் கேட்ட உதவிகளை செய்திருக்கிறார்கள்.
தற்போது நிறைய பேர் என்னிடம் உதவி கேட்டு வருவதால் அரசின் உதவியை நாடுவது என முடிவு செய்துள்ளேன். எனவே நான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். அவர்கள் எனது கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். கூடிய விரைவில் உங்கள் வீட்டிற்கு வந்து நேரில் சந்திக்கிறேன்", என லாரன்ஸ் கூறியிருந்தார்.
அதன்படி இன்று அவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளார். தனது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தருவதாக அமைச்சர் ஒத்துக்கொண்டதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார். உதவி தேவைப்படுபவர்களை கூடிய சீக்கிரம் தேடி வந்து சந்திப்பதாக அவர் கூறியுள்ளார்.
கண்களில் திடீர் வீக்கம் வீங்கி.. என்ன ஆனது?.. விசித்திர நோயால் போராடும் 6 மாத சிறுவன்..உதவுங்கள்!


Click it and Unblock the Notifications