Kanchana 4 : விரைவில் காஞ்சனா 4.. ராகவா லாரன்ஸ் கொடுத்த மாஸ் அப்டேட்!

சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வரும் 14ம் தேதி ருத்ரன் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு பிரியா பவானி சங்கர் ஜோடியாகியுள்ளார்.

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் தன்னுடைய பன்முகத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் லாரன்ஸ்.

இவரது கைவசம் சந்திரமுகி 2, ஜிகிர்தண்டா 2 உள்ளிட்ட படங்கள் உள்ள நிலையில், அதிரடி ஆக்ஷன் படமாக ருத்ரன் படம் வெளியாகவுள்ளது.

Actor Raghava lawrence updates about Kanchana 4 movie in his recent interview

நடிகர் ராகவா லாரன்ஸ் : நடிகர் ராகவா லாரன்ஸ் நடிகர், நடன இயக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் வலம் வருகிறார். தற்போது ஜிகிர்தண்டா 2, சந்திரமுகி 2 என அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்ததாக லாரன்ஸ் நடிப்பில் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி அவரது ருத்ரன் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் லாரன்சிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளனர்.

படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அடுத்தடுத்த லிரிக் வீடியோ பாடல்களும் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்தப் பாடல்களில் லாரன்சின் நடன அசைவுகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ரீமிக்ஸ் பாடலிலும் லாரன்ஸ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்தது.

Actor Raghava lawrence updates about Kanchana 4 movie in his recent interview

படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகிறது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது ருத்ரன் படம். சென்னை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு சிறப்பாக தயாராகியுள்ளது படம். இந்தப் படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்ட ராகவா லாரன்சிடம் காஞ்சனா படத்தின் அடுத்த பாகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது நடந்து வருவதாகவும், கைவசம் உள்ள படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு, காஞ்சனா 4 படத்தை இயக்கி நடிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். காஞ்சனா படங்களை இயக்கி அவற்றை வெற்றிப் படங்களாக்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். இந்தப் படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது.

ராகவா லாரன்ஸ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியானது முனி. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான காஞ்சனா படம் மிகவும் சிறப்பாக அமைந்தது. படத்தில் கோவை சரளா, லாரன்ஸ், தேவயானி உள்ளிட்டவர்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக பேசப்பட்டது. படத்தில் லஷ்மி ராயின் கவர்ச்சியும் அதிகமான வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வெளியிட்ட லாரன்ஸ். இந்நிலையில் தற்போது காஞ்சனா 4 படம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X