நீ என் குழந்தை.. உதவி கேட்ட மாணவியின் வீடியோவை பகிர்ந்து ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், உதவி என்று தன்னை நாடி வந்து உதவி கேட்டவர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்து வருகிறார். தற்போது ஸ்வேதா என்ற மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தன்னுடைய படிப்பு செலவுக்காக உதவி செய்யும் படி, வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ டிரெண்டான நிலையில், அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராகவா லாரன்ஸ் கவலைப்படாதே இரண்டே நாளில் உன்னை சந்திக்கிறேன் என கூறியுள்ளார்.

முன்னணி நடிகரான ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் தனக்கு என்று ஓர் நிலையான இடத்தை பிடித்துள்ளார். இதுவரையில் பல மக்களுக்கு தனித்த முறையில் உதவிகள் செய்து லாரன்ஸ், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கி "மாற்றம்" என்ற பெயரில் மாற்றத்தை தரும் பல உதவிகளை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

Raghava Lawrence Maatram

மாற்றம்: இதன் முதற்கட்டமாக ராகவா லாரன்ஸ் பத்து ஊர்களுக்கு தனது குழுவுடன் நேரில் சென்று 10 ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து, நடிகர் எஸ். ஜே.சூர்யா மாற்றத்திற்கு தனது பங்களிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேனம்பாத்தைச் சேர்ந்த விவசாயிக்கு சொந்த செலவில் டிராக்டர் வழங்கி மாற்றத்திற்கான தனது சேவையை துவங்கினார்.

படிக்க உதவி செய்யுங்க ப்ளீஸ்: இந்நிலையில், மாற்றுத்திறனாளி மாணவியான ஸ்வேதா, தனது படிப்பிற்கு உதவுமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ராகவா மாஸ்டர் சார் நீங்க எங்களை போன்று இருப்பவர்களுக்கு உதவி செய்வதை பார்த்து இருக்கிறேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவி, எனக்கு படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று ஆசை. ஆனால், எங்கள் அம்மாவால் படிக்கவைக்க முடியாது நீங்க உதவி செய்வீர்களா என கேட்டு இருந்தார்.

நீ என் குழந்தை: இணையத்தில் இந்த வீடியோ டிரெண்டாகி அது ராகவா லாரன்ஸின் கண்ணில் பட, அந்த வீடியோவை லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஹாய் ஸ்வேதா, கவலைப்படாதே, இன்றிலிருந்து நீ என் சொந்த குழந்தை, நான் எப்போதும் உங்களுக்காக இருப்பேன், இரண்டு நாட்களில் உங்களை சந்திப்பேன் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X