Raghava Lawrence: ராகவா லாரன்சின் 25வது படம் அறிவிப்பு.. அட டைட்டிலே மிரட்டலா இருக்கே!

சென்னை: நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். சமூக அக்கறையுடன் பல சமூக பணிகளையும் மேற்கொண்டுவரும் ராகவா லாரன்ஸ் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளையொட்டி அவரது 25வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவும் லீட் கேரக்டரில் நடித்திருந்தார். பல திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் திரையிடப்பட்டு வருகிறது.

raghava lawrence kaala bhairava movie bullet movie


நடிகர் ராகவா லாரன்ஸ்: நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குநராக தன்னுடைய பயணத்தை சினிமாவில் துவங்கியவர். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஆஸ்தான நடன இயக்குநராக பணியாற்றிய ராகவா லாரன்ஸ் ஒரு கட்டத்தில் தானே படங்களில் ஹீரோவாக களமிறங்கினார். காஞ்சனா சீரிஸில் இவர் அடுத்தடுத்த படங்களை இயக்கி, தயாரித்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். மற்ற இயக்குநர்களின் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடித்த ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

மாற்றம் அறக்கட்டளை: முன்னதாக சந்திரமுகி 2 படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்ற படத்திலும் இவர் கமிட்டாகியுள்ளார். மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவி வருகிறார் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கியுள்ளார். இதேபோல தன்னுடைய பிறந்தநாளையொட்டி விதவை பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கியுள்ளார். இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வரும் ராகவா லாரன்சிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ராகவா லாரன்சின் 25வது படம்: இந்நிலையில் தெலுங்குப்பட இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் தன்னுடைய 25வது படத்தில் நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தை நீலத்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சூப்பர் ஹீரோ படமாக உருவாகவுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாகவும் தயாராகவுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் ராகவா லாரன்சின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு கால பைரவா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மிரட்டும் போஸ்டர்கள்: இதனிடையே ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் புல்லட் படத்தின் புதிய போஸ்டரும் அவரது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவரது தம்பி எல்வின் முக்கியமான கேரக்டரில் நடித்துவரும் நிலையில் படத்தை இன்னாசி பாண்டியன் இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் இன்று மாலை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X