Chandramukhi2: பேய்க்கு வயசாகுமா ஆகாதா.. முருகேசனுக்கு வந்த டவுட்.. சந்திரமுகி 2 ட்ரெயிலர் இதோ!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படம் இந்த மாதம் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

முன்னதாக கடந்த வாரத்திலேயே இந்தப் படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. கடந்த 2005ம் ஆண்டில் ரஜினிகாந்த் லீட் கேரக்டரில் நடித்திருந்த சந்திரமுகி படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. படத்தை இயக்குநர் பி வாசு இயக்கியிருந்தார்.

Actor Raghava lawrences Chandramukhi 2 movie new trailer released

சந்திரமுகி 2 படத்தின் புதிய ட்ரெயிலர் வெளியீடு: நடிகர்கள் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு என முன்னணி கேரக்டர்களுடன் கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது சந்திரமுகி படம். பி வாசு இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்தப் படம் மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக தெலுங்கிலும் இந்தப்படம் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தில் ரஜினிக்காக தமிழில் சில விஷயங்களை சேர்த்து மாஸாக உருவாக்கியிருந்தார் இயக்குநர் பி வாசு.

படத்தில் ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி, த்ரில்லர் என பல்வேறு விஷயங்கள் சேர்க்கப்பட்டது. குறிப்பாக படத்தில் ரஜினியின் ஆக்ஷன், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு, நயன்தாராவின் ப்ரெஷ்னஸ், ரஜினி -வடிவேலு காமெடி உள்ளிட்டவை மிகவும் சிறப்பாக சேர்க்கப்பட்டு, ரஜினிக்கு மட்டுமில்லாமல் இந்தப் படத்தின் நடிகர்கள் அனைவருக்கும் படம் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்திருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்தே பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவிற்கு கிடைத்தது.

இந்நிலையில் 18 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது பி வாசுவே இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் கடந்த வாரத்திலேயே வெளியாக திட்டமிடப்பட்ட நிலையில், சில சிஜி வேலைகள் மீதமிருந்ததால், செப்டம்பர் 28ம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன்களில் ராகவா லாரன்ஸ், மஹிமா உள்ளிட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கோவையில் ரசிகர்களை சந்தித்த படக்குழு இன்றைய தினம் ஐதராபாத்தில் ரசிகர்களை சந்திக்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் முன்னதாக வெளியானது. இசை வெளியீடும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், இயக்குநர் பி வாசு, வடிவேலு உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவரும்வகையில் பேசினர்.

Actor Raghava lawrences Chandramukhi 2 movie new trailer released

இந்நிலையில் தற்போது படத்தின் புதிய ட்ரெயிலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆஸ்கர் நாயகன் கீரவாணியின் இசையில் படத்தின் மிரட்டலான பாடல்களும் முன்னதாக வெளியாகியுள்ளன. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் புதிய ட்ரெயிலரில், சந்திரமுகியில் கங்காவாக நடித்திருந்த ஜோதிகா குறித்த பேசும் உரையாடல்களும் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தில் ஒரிஜினல் சந்திரமுகியே களமிறங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சந்திரமுகி படத்தில் ரஜினி, வடிவேலு இருவரும் இணைந்து பேய் குறித்து பேசும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதனிடையே சந்திரமுகி 2 படத்திலும் ராகவா லாரன்சுடன் இணைந்து பேய் குறித்த தன்னுடைய சந்தேகத்தை எழுப்பியுள்ளார் வடிவேலு. பேய்க்கு வயசாகுமா ஆகாதா, மண்டையில முடி கொட்டுமா கொட்டாதா என்று வடிவேலு லாரன்சிடம் கேட்க, அதை ஏன் முருகேசா என்கிட்ட கேட்குற என்று லாரன்ஸ் கேட்கும்படியான ரகளையான காட்சிகள் இந்த ட்ரெயிலரில் இடம்பெற்றுள்ளன. இது படததிற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X