Chandramukhi 2: வேட்டைய ராஜா வரார்.. சந்திரமுகி 2 மிரட்டலான புதிய ட்ரெயிலருக்கு தயாரா மக்களே!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் சந்திரமுகி 2.

வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது சந்திரமுகி 2. இந்தப் படம் முன்னதாக கடந்த வாரத்திலேயே வெளியாகவிருந்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது.

Actor Raghava lawrences Chandramukhi 2 movies new trailer release today

முன்னதாக ரஜினி, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 படம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் சந்திரமுகி 2 படமும் ரசிகர்களை சிறப்பாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வெளியாகும் சந்திரமுகி 2 புதிய ட்ரெயிலர்: நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வெளியான கடந்த 2005ம் ஆண்டில் வெளியன சந்திரமுகி படம் ரஜினி கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தது. இந்தப் படத்தில் ஜோதிகாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் அமைந்தது. நயன்தாரா, வடிவேலு, பிரபு உள்ளிட்டவர்களும் இந்தப் படத்திற்கு சரியான கேரக்டர் சாய்சாக இருந்தனர். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 18 ஆண்டுகள் கழித்து படத்தின் 2வது பாகம் உருவாகியுள்ளது.

Actor Raghava lawrences Chandramukhi 2 movies new trailer release today

இந்தப் படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த வாரத்திலேயே திட்டமிடப்பட்ட நிலையில், படத்தின் சில வேலைகள் பாக்கியிருந்ததால் படத்தின் ரிலீஸ் இம்மாதம் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த படத்தின் இசை வெளியீட்டில் நடிகர் லாரன்ஸ், கங்கணா ரனாவத், இயக்குநர் வாசு, மஹிமா நம்பியார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் கோவையில் இந்தப் படத்தின் பிரமோஷன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கோவை லுலு மாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் லாரன்ஸ், மஹிமா நம்பியார் உள்ளிட்டவர்கள் பங்கேற்று ரசிகர்களிடையே படம் குறித்து உரையாடினர்.

Actor Raghava lawrences Chandramukhi 2 movies new trailer release today

நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ், எப்போதும் உரிமையுடன் அண்ணா என்று குறிப்பிட்டு பேசும் கோவை மக்களை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் இருந்த அனைத்து அம்சங்களும் சந்திரமுகி 2 படத்திலும் உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்த லாரன்ஸ், இந்தப் படம் அனைவரையும் கவரும் என்றும் உறுதியுடன் தெரிவித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தை தான் திரையரங்குகளில் சென்று பார்த்ததாகவும் தற்போது அதன் இரண்டாவது பாகத்தில் நடித்துள்ளது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Actor Raghava lawrences Chandramukhi 2 movies new trailer release today

இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் தற்போது வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு இந்த ட்ரெயிலர் வெளியாகவுள்ளது. முதல் ட்ரெயிலர் வெளியாகி கலவையான விமர்னங்களை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது ட்ரெயிலர் வெளியாகவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே படத்தின் ப்ரமோஷன்களும் ஒரு பக்கம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் ரசிகர்களை சந்தித்த படக்குழு இன்று ஐதராபாத்தில் பிரமோஷனில் ஈடுபட உள்ளது. இதுகுறித்து மஹிமா நம்பியார் அப்டேட் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X