Chandramukhi 2: வெளியானது ராகவா லாரன்சின் வேட்டையன் லுக்.. மனுஷன் சும்மா மிரட்டுறாரே!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது சந்திரமுகி 2 படம்.

ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்திருந்தது சந்திரமுகி.

இந்தப் படத்தை பி வாசு இயக்கியிருந்த நிலையில், தற்போது 18 ஆண்டுகள் கழித்து சந்திரமுகி 2 படத்தையும் அவரே இயக்கியுள்ளார்.

Actor Raghava lawrences Vettaiyan look in Chandramukhi 2 released

சந்திரமுகி 2 படத்தின் மிரட்டலான வேட்டையன் லுக் வெளியீடு: நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு மற்றும் வடிவேலு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது சந்திரமுகி. பி வாசு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கமர்ஷியல் படங்களுக்குரிய அனைத்து அம்சங்களையும் சிறப்பாக கையாண்டிருந்தது. நடிகர் ரஜினியின் கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தது. படத்தின் அனைத்து நடிகர்களுக்கும் சிறப்பாக அமைந்த இந்தப் படத்தில் வடிவேலு காமெடியும் எவர்கிரீன் ரகமாக அமைந்தது.

இந்தப் படம் ரஜினியின் கேரியரில் பெஸ்ட்டாக அமைந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. படத்தில் ரஜினியே இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னுடைய கேரியர் பெஸ்ட்டாக ஒரு சந்திரமுகியே போதும் என்று நினைத்தாரோ என்னவோ, ரஜினி இந்தப் படத்தில் நடிக்கவில்லை. மாறாக, அந்த கேரக்டரில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து முடித்துள்ளார்.

ராகவா லாரன்சுடன் கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்களும் சந்திரமுகி 2 படத்தில் இணைந்துள்ளனர். மைசூரு, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் அரண்மனைகளிலும் அரண்மனை செட் போடப்பட்டும் இந்தப் படத்தின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக படம் வெளியாகவுள்ளது.

Actor Raghava lawrences Vettaiyan look in Chandramukhi 2 released

படத்தில் ஆஸ்கர் வின்னிங் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குநராக செயல்பட்டுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சந்திரமுகி படத்தில் ரஜினியின் வேட்டையன் கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. படத்திற்கு அந்த கேரக்டர் முக்கியமானதாக அமைந்திருந்தது. இந்நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்தின் ராகவா லாரன்சின் வேட்டையன் கேரக்டர் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். வேட்டையன் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளதை கூறியுள்ள அவர், அனைவரது ஆசிர்வாதங்களும் தேவை என்றும் கூறியுள்ளார். அவரது இந்த வேட்டையன் லுக் மிரட்டலாக அமைந்துள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்புகளையும் கூட்டியுள்ளது. படம் முந்தைய பாகத்தின் சிறப்பை எப்படி மீண்டும் கொண்டுவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X