Kanchana 4: ராகவா லாரன்சின் அடுத்த அதிரடி.. காஞ்சனா 4 படத்தின் பேய் ரெடி.. அட இவங்கதானா அது?

சென்னை: நடிகர், தயாரிப்பாளர், நடன இயக்குநர், இயக்குநர் என பல்வேறு தளங்களில் பயணித்து வரும் ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்து வேறு இயக்குநர்களுடனும் இணைந்து நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் இவர் தான் ஹீரோ. இந்நிலையில் விரைவில் இவரது இயக்கத்தில் காஞ்சனா 4 படம் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து காஞ்சனா படங்களை ஹாரர் திரில்லர் படங்களாக கொடுத்து வெற்றிப் பெற்ற ராகவா லாரன்ஸ் அடுத்ததாக காஞ்சனா 4 குறித்தும் முன்னதாக அறிவித்திருந்தார். இந்த படத்தில் மிருணாள் தாகூர் இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அந்த தகவல் உண்மை இல்லை என்று ராகவா லாரன்ஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

raghava lawrence kanchana 4 movie pooja hegde

நடிகர் ராகவா லாரன்ஸ்: கோலிவுட்டில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகத் திறமைகளை காட்டி வருபவர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குநராகவே இவர் தன்னுடைய கேரியரை சினிமாவில் துவங்கினார். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடன இயக்குநராக மாஸ் காட்டிய ராகவா லாரன்ஸ், ஒரு கட்டத்தில் முனி படம் மூலம் கோலிவுட்ல கவனம் ஈர்த்தார். தொடர்ந்து காஞ்சனா சீரிசாக மூன்று படங்களை கொடுத்துள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் வெளியான இந்த படங்கள் அனைத்தும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படங்களாக மாறியுள்ளன.

காஞ்சனா 4 படம்: இந்த நிலையில், அடுத்ததாக காஞ்சனா 4 படம் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் முன்னதாக மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் லாரன்ஸ் கூறியிருந்தார். இந்நிலையில் காஞ்சனா 4 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே, இந்த படத்தின் நாயகியாக பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து ஆட்டம் போட போட்ட பூஜா ஹெக்டே இணைய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேயாக நடிக்கும் பூஜா ஹெக்டே: பூஜா ஹெக்டே தான் காஞ்சனா 4 படத்தில் பேயாக நடிக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போது மீண்டும் விஜய்யுடன் தளபதி 69 படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, ரெட்ரோ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் காஞ்சனா 4 படத்தில் இவர் இணைவாரா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ஹாரர் திரில்லர் படத்தில் காமெடியை மிகஸ் செய்து அடுத்தடுத்து காஞ்சனா படங்கள் வெளியான நிலையில், இந்த 4வது பாகமும் சிறப்பான கூட்டணியுடன் காமெடி கலாட்டா செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

அழகான பேய்: கடந்த 2011ம் ஆண்டில் காஞ்சனா படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில், இதன் இரண்டாவது பாகம் கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது. இதை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டில் காஞ்சனா 3 படமும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்ற படத்தில் நடித்துவரும் ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தை தொடர்ந்து காஞ்சனா 4 படத்தின் சூட்டிங்கை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அழகான பேய் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X