Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிரபல நடிகர் ரகுமானின் தாயார் காலமானார் !
சென்னை : நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி இன்று காலமானார்.
80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரகுமான். இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரஹ்மான் கே.பாலச்சந்தர் இயக்கிய புதுபுது அர்த்தங்கள் திரைப்படத்தில் அற்புதமாக நடித்து. தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
கதாநாயகனாக நடித்து வந்த ரகுமான், பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு, அஜித் நடித்த பில்லா திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். இத்திரைப்படம் இவருக்கு நல்ல திருப்புனை திரைப்படமாக அமைந்தது.
இந்நிலையில் நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 84. இன்று மதியம் 3.30 மணிக்கு பெங்களூருவில் காலமானார்.
சாவித்ரியின் இறுதிச் சடங்கு நாளை வியாழக்கிழமை காலை கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திலுள்ள நிலம்பூரில் நடைபெற உள்ளது. இவருக்கு டாக்டர். ஷமீம் என்ற மகளும் உள்ளார். ரஹ்மானுக்கு திரைப்பிரபலங்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.