For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆபரேஷன் அரபைமாவுக்கு தயாராகும் ரகுமான்

|

சென்னை: துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் ரகுமான், அதன் பின்பு நல்ல கதையம்சம் உள்ள படங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் இப்போது ஆபரேஷன் அரபைமா என்னும் திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் ரகுமான் 1983ஆம் ஆண்டு கூடிவிடெ என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமாகி கேரளா அரசின் சிறந்த நடிகர் விருதையும் பெற்றார். அதையடுத்து மலையாள சினிமா உலகில் பிரபலமான நடிகராகிவிட்டார். பின்பு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த நிலவே மலரே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் காலடி வைத்தார்.

Actor Rahman next Action Thriller film Operation Arapaima

பின்பு வசந்த ராகம், கண்ணே கனியமுதே போன்ற படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் திரையுலகில் இவரைப் பற்றி அதிகம் பேசவைத்த படங்கள் என்றால் இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த புதுப்புது அர்த்தங்கள் மற்றும், கல்கி ஆகிய படங்களும், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த சங்கமம் படமும் ரகுமானுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. சிங்கம் 2 படத்தில் வில்லனாகவும் நடித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த துருவங்கள் பதினாறு திரைப்படமும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ரகுமான் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் இப்போது ரகுமான் நடிக்கும் திரைப்படம் ஆபரேஷன் அரபைமா. இந்தப் படமும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தை ப்ராஷ் இயக்குகிறார். கதாநாயகியாக நாடோடிகள் அபிநயா நடிக்கிறார். டைம் அண்டு டைடு ப்ரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக தயாராகி வரும் இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில், கடமை தவறாத நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையை மையக் கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் திரில்லர் படமாகும்

சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிகர் ரகுமான் கிடைத்தது மிகப் பெரிய பலமாக நினைக்கிறேன். நான் கற்பனை செய்து வைத்திருந்த கதாபாத்திரத்தை அச்சு அசலாக அப்படியே என்னுடைய கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நவீன தொழில் நுட்பங்களுடன் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது என்று இயக்குநர் ப்ராஷ் கூறினார்.

இயக்குநர் ப்ராஷ் முன்பு பிரபல இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழி படங்களில் பணிபுரிந்த அனுபவமும் கொண்டவர். முக்கியமாக இந்திய ராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Rahman, who has been received good response by the public through the Dhuruvangal Pathinaaru film, has been selected as a good storyteller. He is now playing a completely different role in the movie Operation Arapaima.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more