பிறந்தநாள் ஸ்பெஷல்... வாழ்க்கையின் முக்கிய 3 பெண்களுடன் புகைப்படம்... வைரலான போட்டோ

சென்னை : நடிகர் ரஹ்மான் தமிழ், தெலுங்கு மலையாளம் என 3 மொழிகளிலும் சிறப்பான படங்களில் நடித்து வருபவர்

சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் 16 படத்தில் நடித்துள்ளார் ரஹ்மான்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாளையொட்டி தனது குடும்ப புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

90களின் நாயகன்

90களின் நாயகன்

நடிகர் ரஹ்மான் தமிழ், தெலுங்கு, மலையாளம் என வலம் வருபவர். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். 90களின் நாயகன். சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் 16 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்சஸ் ஆகியுள்ளது.

வைரலான புகைப்படம்

வைரலான புகைப்படம்

இவர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் மனைவியின் அக்கா மெஹ்ருன்னிசாவை மணம் முடித்துள்ளார். இவருக்கு ருஷ்தா ரஹ்மான் மற்றும் ஆலிஷா ரஹ்மான் என இரண்டு பெண் குழந்தைகள். முன்னதாக இவர்கள் இருவரின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் ரஹ்மான் வெளியிட்டார். அது அப்போது வைரலானது.

பேமிலி புகைப்படம் வெளியீடு

பேமிலி புகைப்படம் வெளியீடு

இந்நிலையில் கடந்த 23ம் தேதி தனது பிறந்தநாளையொட்டி தனது பேமிலி புகைப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. தன் வாழ்க்கையின் முக்கிய 3 பெண்களின் இந்த புகைப்படத்தை அவர் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.

முகங்களில் புன்சிரிப்பு

முகங்களில் புன்சிரிப்பு

பிறந்தநாளையொட்டி அவர்கள் உணவு மேஜையின் முன்பு அமர்ந்தபடி இந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர். அனைவரின் முகங்களிலும் புன்சிரிப்பு தவழ்கிறது. டேபிளில் பிரியாணியும் சைட் டிஷ்ஷூம் சூப்பராக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முன்னால் இந்த உணவுக் கொண்டாட்டமும் நம் கண் முன்னே விரிகிறது.

ஆதரவிற்கும் நன்றி

ஆதரவிற்கும் நன்றி

தன்னுடைய பிறந்தநாளில் வாழ்த்திய அனைவருக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்கள் அளித்துவரும் ஆதரவிற்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் அனைவருக்கும் லவ் யூ மெசேஜூம் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X