‘முதலில் இதை செய் பிறகு பார்க்கலாம்’...கார் வாங்கிக்கேட்ட மகளுக்கு பிரபல நடிகர் கொடுத்த ஷாக்

சென்னை: உலகளவில் பிரபலமான நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம் கற்று தந்துள்ளார்.

நடிகர் ரகுமான், மகள் கல்லூரியில் படித்து வருகிறார். 18 வயதை கடந்தவுடன் கார் ஓட்ட லைசென்ஸ் பெற்று தனது தந்தையிடம் தனக்கு சொந்த கார் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

எந்த தந்தையும் தன்னால் முடியுமென்றால் தனது குழந்தைகளுக்கு உலகத்தையே வாங்கி தருவார்கள் ஆனால் நடிகர் ரகுமானோ தன் குழந்தையை நல்லபடி வளர்க்க வேண்டுமென்கிற முனைப்பில் தனது மகளுக்கு ஒரு டெஸ்ட் வைத்துள்ளார்.

மாற்றி காட்டு

மாற்றி காட்டு

முன்பெல்லாம் கார் ஓட்டுபவர்களுக்கு கார் பாதியில் நின்றுவிட்டால் காரில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் பற்றி அவர்களுக்கே தெரியும் பஞ்சர் ஆனாலும் அவர்களே கார் டயரை மாற்றுவார்கள், ஆனால் இக்காலத்தில் எல்லோரும் அடுத்தவர்களை சார்ந்தே வாழ்கிறார்கள். அதே போல் தன் குழந்தையும் வளரக்கூடாதென முதலில் கார் டயரை தனி ஆளாக மாற்றி காட்டு உனக்கு கார் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

ரகுமானின் செயலுக்கு பாராட்டு

ரகுமானின் செயலுக்கு பாராட்டு

ரகுமான் மகளும் தன் தந்தையின் சவாலை ஏற்று, தானே காரின் டயரை மாற்றியுள்ளார் அவர் கார் டயரை மாற்றும் வீடியோவை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ளார் நடிகர் ரகுமான். இப்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மேலும் ரகுமானின் செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

மகனோ மகளோ

மகனோ மகளோ

நடிகர் ரகுமான் செய்த இந்த செயல் அவர் மகளுக்கு மட்டுமல்லாமல் பல குடும்பங்களில் பல சின்னச் சின்ன விஷயங்களை யாரையும் எதிர்பார்க்காமல் -மகனோ மகளோ தங்களை தாங்களே செதுக்கிக் கொண்டு காரியங்களை முடிக்கும் சாமர்த்தியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு உந்து சக்தியை ரகுமான் ஏற்படுத்தியுள்ளார். பிரபலங்கள் மட்டும் தான் இப்படிப்பட்ட செயல்களை செய்ய வேண்டும் என்றில்லை எல்லா பெற்றோரும் தங்களுடைய குழந்தைகளுக்கு சரியான வயதில் சரியான பாடங்களை கற்றுக் கொடுத்தாக வேண்டும்.

வெரி குட் டாடி

வெரி குட் டாடி

அப்படி செய்யும் பொழுது நல்லொழுக்கம் மற்றும் சமுதாயத்திற்கு தேவையான அடிப்படை பண்புகள் சமயோஜித புத்தி பிரச்சனைகளை மேற்கொள்ளும் திறன் போன்ற பல விஷயங்கள் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும். ரகுமான் செய்த இந்த செயல் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளது. வெரி குட் டாடி என்று பிரபலங்கள் பலரும் வாழ்த்துகின்றனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X