சொந்தங்கள் சூழ.. டிவி நடிகர் ராகுல் ரவி திருமணம்.. காதலியை கரம்பிடித்தார்.. ரசிகர்கள் வாழ்த்து!

By

சென்னை: சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் ராகுல் ரவி தனது காதலியை திருமணம் செய்துகொண்டார்.

சன் டிவியில் வெளியான 'நந்தினி' தொடர் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ராகுல் ரவி.

மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்த அவர், 2013 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார்.

பொன்னம்பிளி

பொன்னம்பிளி

மலையாளத்தில் ஃபகத் பாசில், துல்கர் சல்மான் படங்களில் நடித்திருக்கும் இவர், பின்னர் சின்னத்திரைக்கு வந்தார். பொன்னம்பிளி என்ற மலையாளத் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து நடித்த அவர், தமிழில் நந்தினி சீரியல் மூலம் கவனிக்கப்பட்டார். வாய்ப்புகள் தொடர்ந்தன.

திடீரென நிறுத்தம்

திடீரென நிறுத்தம்

பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய, சாக்லேட் என்ற தொடரிலும் இவர் நாயகனாக நடித்தார். அதிலும் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. பின்னர், கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட லாக்டவுனுக்கு பிறகு, இத்தொடர் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.

லட்சுமி நாயர்

லட்சுமி நாயர்

இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே என்ற தொடரில் யுவா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தத் தொடர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இவர், கடந்த சில நாட்களுக்கு முன், லட்சுமி நாயர் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சோசியல் மீடியாவில் கூறியிருந்தார்.

சரமாரி வாழ்த்து

சரமாரி வாழ்த்து

அதோடு தனது வருங்கால மனைவியின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார். கூடவே டச்சிங்கான போஸ்ட் ஒன்றையும் பதிவு செய்திருந்தார். இருவரும் சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். இதையடுத்து ரசிகர்கள் சரமாரியான வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

 கொரோனா காலம்

கொரோனா காலம்

இந்நிலையில், அவர்கள் திருமணம் கேரள மாநிலம் பெரும்பாவூரில் ஞாயிற்றுக்கிழமை இந்து முறைப்படி, எளிமையாக நடந்துள்ளது. கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதால் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

திருமண வீடியோ

திருமண வீடியோ

இதில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அவர்களுடைய திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X