Rajinikanth: கூலி பட முதல்கட்ட சூட்டிங்.. சூப்பர் ஸ்டாருடன் இணையும் நடிகர்கள் யாருன்னு தெரியுமா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இன்னும் சில தினங்களில் இணையவுள்ளார். இதையொட்டி தன்னுடைய இமயமலை பயணங்களை நிறைவு செய்துவிட்டு அவர் சென்னை திரும்பியுள்ளார். இதனிடையே கூலி படத்தின் முதல் கட்ட சூட்டிங் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் பிரமோ வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முந்தைய படமான விஜய்யின் லியோ போல ரிலீஸ் தேதியை கமிட் செய்து கொள்ளாமல் இந்த படத்தை சுதந்திரமாக இயக்க உள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ள சூழலில் படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள நிலையில் வரும் 10ம் தேதி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வேட்டையை படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு இடைப்பட்ட காலத்தில் இமயமலையில் ஆன்மீக சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த ரஜினிகாந்த், கூலி படத்தின் ஷூட்டிங்கில் இணையும் வகையில் சென்னை திரும்பியுள்ளார். ஏர்போர்ட்டில் அவர் நடந்து வரும்படியான வீடியோ வெளியான சூழலில் இந்த வயதிலும் அவரது சுறுசுறுப்பு ரசிகர்களையும் தொற்றிக் கொண்டது.
கூலி படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் : இந்நிலையில் கூலி படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கை வரும் 10ம் தேதி துவங்கி சென்னை மற்றும் ஹைதராபாத் என அடுத்தடுத்த இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப் முக்கியமான கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை தயாரிப்பு தரப்பு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: இந்தப் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க கமிட்டாகியுள்ள சூழலில் படத்தின் இசையும் வேறு லெவலில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜெயிலர் படத்திலும் இந்தக் கூட்டணி மாஸ் காட்டியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ள சூழலில் மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படத்தின் கதைக்களம் அமையும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த், வில்லன் மற்றும் ஹீரோ என அடுத்தடுத்த ஷேட்களில் நடிக்கவுள்ள நிலையில், அவரது கேரக்டர் ரசிகர்களை சிறப்பாக கவரும் என்று முன்னதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
ஜெயிலர் 2 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடனேயே ஜெயிலர் 2 படத்திற்காக இணையவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் பிரபல தெலுங்குப்பட நடிகர் பாலகிருஷ்ணா இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார் நெல்சன் திலீப்குமார். இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக அவர் கூலி படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications