ஆண் நடிகரையும் விடாத இயக்குநர் ரஞ்சித்.. நிர்வாணமாக்கி நடிகைகளுக்கு போட்டோக்களை ஷேர் செய்த கொடுமை!
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் வெடித்துள்ள பாலியல் சர்ச்சை தோண்ட தோண்ட பூதாகரமாகிக் கொண்டே செல்கிறது. பட வாய்ப்புகளுக்காக நடிகைகளுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என சினிமா பிரபலங்கள் பலர் தொல்லைக் கொடுத்து வருவதாக நடிகைகள் ஒவ்வொருவராக வெளியே வந்து புகார்களை அளித்துள்ளனர்.
அதன் எதிரொலியாக AMMA எனும் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் அதிர்ச்சியையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

மலையாள இயக்குநர் ரஞ்சித் மீது நடிகை ஒருவர் பாலியல் புகாரை வைத்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆண் நடிகர் ஒருவரும் இயக்குநர் ரஞ்சித் தன்னை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
சிக்கலில் ரஞ்சித்: மலையாள நடிகை ரேவதி சம்பத், அம்மா அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த இயக்குநர் சித்திக், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார். இதனையடுத்து சித்திக், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். மற்றொரு நடிகரான ரியாஸ் கான் மீதும் ரேவதி குற்றம்சாட்டியிருந்தார். அவரை தொடர்ந்து வங்காள நடிகை ஸ்ரீலேகா மித்ரா கலாசித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பில் இருந்த இயக்குநர் ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்த நிலையில், தற்போது ஆண் நடிகர் ஒருவர் அவர் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
நிர்வாணப்படுத்தி டார்ச்சர்: சினிமா வாய்ப்புத் தேடி இயக்குநர் ரஞ்சித்தை அணுகிய நிலையில், கட்டாயப்படுத்தி தனது ஆடைகளை களைய செய்து தன்னை நிர்வாணப்படுத்தி வீடியோக்களை எடுத்து ரொம்பவே டார்ச்சர் கொடுத்தார் இயக்குநர் ரஞ்சித் என அந்த நடிகர் தற்போது பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
நடிகைகளுக்கு ஷேர்: தன்னை நிர்வாணப்படுத்தி எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவருடைய தோழிகளான சக நடிகைகளுக்கு ஷேர் செய்து தனது வக்கிரத்தை வெளிப்படுத்தினார் என்றும் அந்த நடிகர் தற்போது அழுது புலம்பி தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளது பெரும் அதிர்வலையை மலையாள திரையுலகில் ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகளும் உடந்தை?: கேரளாவில் நடைபெற்ற பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பின்னணியில் சில முன்னணி நடிகைகளும் உடந்தையாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னணி நடிகர்கள் செய்யும் தவறுகளை இதுவரை வெளிக் கொண்டு வராமல் இருந்ததே அவர்கள் தான் என்றும் இளம் நடிகைகள் மற்றும் பார்வதி போன்ற சிலர் மட்டுமே குரல் கொடுத்து வருவதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











