விக்ரமின் ஃபிரன்ட்ஷிப்பால் 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த பாரதிராஜா ஹீரோ!
Recommended Video
சென்னை: நடிகர் விக்ரமின் நட்பால் 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் பாரதி ராஜாவால் அறிமுகமான ஹீரோ ஒருவர்.
1980 மற்றும் 90 களில் தமிழில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர் நடிகர் ராஜா. இயக்குநர் பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் அனைவருக்கும் பிரபலமானவர்.
தெலுங்கு படத் தயாரிப்பாளரான ராமநாயுடுவின் உறவினரான ராஜா, ஏராளமான படங்களில் ஹீரோவாகவும், துணை நடிகராகவும் மாப்பிள்ளையாகவும் நடித்திருக்கிறார். பாராதிராஜாவிடம் நடிப்பு பயின்ற இவர், அவரின் பெரும்பாலான படங்களில் தலைக்காட்டியிருக்கிறார்.

ரஜினி, கமல்
மணிவண்ணனுடன் இணைந்து நெகட்டிவ் ரோலில் இவர் நடித்த இனி ஒரு சுதந்திரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினியுடன் மாப்பிள்ளை படத்திலும் கமலுடன் சதிலீலாவதி படத்திலும் துணை நடிகராக நடித்தார்.

கருத்தம்மா
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் ராஜா. இவர் ஹீரோவாக நடித்த கருத்தம்மா படம் பெரும் ஹிட்டானது.

கிரானைட் கம்பெனி
தொடர்ந்து படங்களில் நடித்த இவருக்கு, ஹீரோ சான்ஸை விட, இரண்டாவது ஹீரோ மற்றும் மாப்பிள்ளை வாய்ப்புகளே அதிகம் கிடைத்தன. இதனால் நொந்துப்போன அவர், சினிமாவில் இருந்து விலகி சென்னையில் காஸ்மோ கிரானைட் என்ற கிரானைட் கம்பெனியை நடத்தி வருகிறார்.

மீண்டும் சினிமாவில்..
சுமார் 18 வருடங்களாக அவர் தமிழ் சினிமாவில் இருந்து விலகி தொழிலில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது ஆதித்ய வர்மா படத்தில் துருவ்வுக்கு அப்பாவாக 18 வருடம் கழித்து மீண்டும் நடிக்கவுள்ளார் ராஜா.

நீண்ட நாள் நண்பர்
நடிகர் விக்ரமின் நீண்ட நாள் நண்பர் என்பதால் ஆதித்ய வர்மா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம் ராஜா. ராஜா கடைசியாக தமிழில் கண்ணுக்கு கண்ணாக என்ற படத்தில் முரளியுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











