twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செம போதை.. மைக்கை பிடுங்கி.. காலில் விழுந்து.. நடிகர் சங்க விழாவில் அட்டகாசம் செய்த பிரபல நடிகர்!

    |

    Recommended Video

    நடிகர் சங்க விழாவில் அட்டகாசம் செய்த பிரபல நடிகர்! - வீடியோ

    ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் சங்க விழாவில் பிரபல நடிகர் ஃபுல் போதையில் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறி காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தெலுங்கு நடிகர் சங்கத்தின் 2020ம் ஆண்டுக்கான 'மா' என்றழைக்கப்படும் டைரி வெளியீட்டு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கு திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களான மோகன்பாபு, முரளி மோகன், கிருஷ்ணம் ராஜு, ஜெயசுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாடினார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறினார்.

    நடிகர் சங்க விழாவில் பரபரப்பு... மேடையில் காரசாரமாக மோதிய டாப் ஹீரோக்கள்... நடிகைகள் அதிர்ச்சி நடிகர் சங்க விழாவில் பரபரப்பு... மேடையில் காரசாரமாக மோதிய டாப் ஹீரோக்கள்... நடிகைகள் அதிர்ச்சி

    ஒற்றுமை

    ஒற்றுமை

    தொடர்ந்து பேசிய அவர், தெலுங்கானா முதல்வர் நடிகர் சங்கத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் நடிகர் சங்கத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் கொடுத்தார்.

    காலில் விழுந்து

    காலில் விழுந்து

    அவரை தொடர்ந்து கதாசிரியர் பருசூரி கோபால கிருஷ்ணன் பேச தொடங்கினார். அப்போது நடிகர் ராஜசேகர், அவரிடமிருந்து மைக்கை பிடுங்கியுள்ளார். பின்னர் வயது வித்தியாசம் இல்லாமல் மேடையில் இருந்த அனைவரின் காலிலும் விழுந்தார் நடிகர் ராஜசேகர்.

    ஃபுல் போதை

    ஃபுல் போதை

    இதனால் பெரும் பரபரப்பும் சங்கடம் ஏற்பட்டது. அவர் மைக்கை பிடுங்கியபோதே அவர் ஃபுல் போதையில் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது.

    மோதல்

    மோதல்

    இதனால் நடிகை ஜெயசுதா பட்டபரிவர்த்தனமாக அவரை பேசவிடாமல் தடுத்தார். ஆனாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாத ராஜசேகர், தற்போதைய நடிகர் சங்கத் தலைவரான நரேஷுடனான மோதல் குறித்து பேசினார்.

    அவர்தான் காரணம்

    அவர்தான் காரணம்

    அவரால்தான் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் பர்சனல் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட பிரச்சனை என்றும் அண்மையில் தனது கார் விபத்துக்குள்ளானதும் அதனால் தான் என வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி உளறிக்கொட்டினார்.

    வெளியே வரக்கூடாது

    வெளியே வரக்கூடாது

    இதனால் ரொம்பவே அப்செட்டானார் நடிகர் சிரஞ்சீவி, அவர் ஏற்கனவே நடிகர் சங்கத்திற்குள் உள்ள பிரச்சனைகள் உள்ளேயே பேசி தீர்க்கப்பட வேண்டும் பொது வெளிக்கோ அல்லது மீடியாவுக்கோ வரக்கூடாது என்று கூறியிருந்தார்.

    முகம் சுளித்தனர்

    முகம் சுளித்தனர்

    ஆனால் அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் நடிகர் சங்க தலைவர் மீது சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளே நடக்கும் பிரச்சனைகளை குடிபோதையில் உளறினார் நடிகர் ராஜசேகர். மேலும் மூத்த நடிகர்களான மோகன் பாபு, கிருஷ்ணம் ராஜூ ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது ராஜசேகரின் இந்த செயல்பாடு பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

    பயனில்லை

    பயனில்லை

    ராஜசேகரின் இந்த பேச்சின் போது, நடிகர் சிரஞ்சீவி, நடிகை ஜெயசுதா மற்றும் மோகன் பாபு ஆகியோர் அவரைத் தடுக்க முயன்றனர். ஆனாலும் அதற்கு பயனில்லை. அவர் விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

    கண்டனம்

    கண்டனம்

    ஒரு கட்டத்தில் நடிகர் ராஜசேகர் கோபத்துடன் மேடையை விட்டு வெளியேறினார். அதன்பிறகு, சிரஞ்சீவி அவரது நடவடிக்கைக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தார்.

    ஒழுங்கு நடவடிக்கை

    ஒழுங்கு நடவடிக்கை

    மேலும் ராஜசேகர் மீது இப்படி நடந்து கொண்டதற்காக நடிகர் சங்கத்தின் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிரஞ்சீவி தெரிவித்தார். . ராஜசேகரின் வார்த்தைகள் மதிக்கப்படவில்லை என்றும், எம்.ஏ.ஏ தொடர்பான பிரச்சினைகள் நான்கு சுவர்களுக்குள் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் சிரஞ்சீவி கூறினார்.

    மன்னிப்பு கேட்ட மனைவி

    மன்னிப்பு கேட்ட மனைவி

    அப்போது அங்குஇருந்த ராஜசேகரின் மனைவியும், நடிகையும், மேலும் சங்கத்தின் பொதுச்செயலாளருமான ஜீவிதா தன் கணவர் செய்த செயலுக்கு மன்னித்து விடுங்கள் என பேசினார். சங்கத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் விவாதித்தார்.

    தொடர்ந்து சண்டை

    தொடர்ந்து சண்டை

    2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் நரேஷுக்கும் ராஜசேகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அங்கு அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A event organised to launch the 2020 diary of Movie Artists Association in telugu cinema. In that function Telugu Actor Rajasekhar interrupted the proceedings to take the stage and speak about his ongoing issue with Naresh, the current president of the MAA. And He blamed the association for losing out on films and personal issues.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X