ஹாலிவுட் அர்னால்டுக்கு வரவேற்பு கொடுத்த கோலிவுட் "அர்னால்ட்" ராஜேந்திரன்!!

By Sudha

சென்னை: சென்னைக்கு வந்த ஹாலிவுட் முன்னாள் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் ஷ்வார்ஸநெக்கரின் சென்னை வருகையால், சென்னையில் உள்ள அத்தனை பாடி பில்டர்களும் நிச்சயம் உற்சாகமாகியிருப்பார்கள்.

அந்த வகையில் நடிகரும், 6 பேக் உடல் கட்டுடன் கூடிய வில்லன் நடிகருமான ராஜேந்திரனும் உற்சாகமடைந்துள்ளார்.

அர்னால்ட் வருகைக்கு வரவேற்பு தெரிவித்து பேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் ராஜேந்திரன்.

நான் கடவுள்

நான் கடவுள்

நான் கடவுள் படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் பயமுறுத்தியவர் ராஜேந்திரன்.

வில்லனாக அதகளம்

வில்லனாக அதகளம்

வில்லனாக சில படங்களில் அதகளப்படுத்தியவர் ராஜேந்திரன். கட்டைக் குரலும், நெட்டை உருவமும், மிரட்டும் உடலமைப்பும் கூடியவரான ராஜேந்திரன் சமீப காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை பயமுறுத்திய முக்கிய வில்லன்களில் ஒருவர்.

காமெடிக்குத் தாவி தரிசாகிப் போன பரிதாபம்!

காமெடிக்குத் தாவி தரிசாகிப் போன பரிதாபம்!

ஆனால் வில்லன் நடிப்பிலிருந்து தடாலடியாக காமெடிக்குத் தாவியதால் ராஜேந்திரனின் வளர்ச்சி கிராப் சர்ரென்று இறங்கி வந்து விட்டது.

வில்லினா, காமெடியனா..

வில்லினா, காமெடியனா..

நாயகன் படத்தின் நல்லவனா, கெட்டவனா டயலாக் போல அனைவரும் ராஜேந்திரனைப் பார்த்து நீங்க வில்லனா, காமெடியனா என்று கேட்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. இப்போது ராஜேந்திரனை அதிகம் பார்க்க முடியாத நிலை.

அர்னால்டுக்கு வரவேற்பு

அர்னால்டுக்கு வரவேற்பு

இந்த நிலையில் சென்னைக்கு வந்துள்ள அர்னால்ட் ஷ்வார்ஸநெக்கருக்கு, தனது பேஸ்புக் பக்கத்தில் வாங்க சார் என்று கூறி வரவேற்பு அளித்துள்ளார் ராஜேந்திரன்.

Vanga sir .. ! Welcome to chennai _/\_

Vanga sir .. ! Welcome to chennai _/\_

இதுதான் ராஜேந்திரன் தனது போஸ்ட்டில் போட்டுள்ள வாசகம். அர்னால்டின் படத்தை இணைத்து இந்தப் போஸ்ட்டைப் போட்டு அர்னால்டை வரவேற்றவர்கள் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் இந்த கோலிவுட் அர்னால்ட்.

அதுசரி ஒரு பாடி பில்டருக்குத்தானே இன்னொரு பாடி பில்டரின் அருமை தெரியும்....!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X