Rajesh: மகனுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்டார்.. அதற்குள் எல்லாம் மாறிடுச்சு.. அழுத வடிவுக்கரசி

சென்னை: மூத்த நடிகர் ராஜேஷ் தனது 75 வது வயதில் திடீர் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவு திரைத்துறையில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி பல திரைப்பிரபலங்கள் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியும் இரங்கல் தெரிவித்தும் வருகிறார்கள். இந்நிலையில் அவரது மறைவு குறித்து மூத்த நடிகை வடிவுக்கரசி மிகவும் எமோஷனலாக நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ராஜேஷ் குறித்து அவர் பேசுகையில், " ராஜேஷ் சார் எப்போதும் அமைதியாக இருப்பார். மற்றவர்களுடன் சகஜமாக பேசக்கூட பயப்படுவார். ஏன் சார் பேசமால் இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினால், இல்லை மேடம், நான் ஒன்று சொல்ல அதை அவர்கள் வேறு மாதிரி புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது தானே என்று கூறுவார். தப்பு செய்யவே பயப்படுவார்.

Actor Rajesh Died His Son Marriage Says Actress Vadivukkarasi

மகன் திருமணத்திற்கு முன்: எனது எல்லா பிறந்த நாட்களுக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து, சால்வை அணிவித்து, மலர்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து கூறுவார். இந்த ஆண்டில் இருந்து எனக்கு அவரது வாழ்த்து கிடைக்காது. ஒருமுறை எனது பிறந்தநாளுக்கு எனக்கு பட்டுப் புடவை வாங்கிக் கொடுத்தார். சில வாரங்களுக்கு முன்னர் பேசும்போது கூட மிகவும் மகிழ்ச்சியாக தனது மகனின் திருமணம் குறித்து பகிர்ந்து கொண்டார். அதாவது, மேடம் என் மகனுக்கு பெண் பார்த்துவிட்டு வந்துவிட்டோம் ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளோம். எனது மகனின் திருமணத்திற்கு உங்களுக்கு நல்ல பட்டுப் புடவை வாங்கித் தருகிறேன் என்று கூறினார். ஆனால் அதற்குள் இறந்துவிட்டார்.

வெளிப்படையாக இருக்க மாட்டார்: எனக்கு அவரது மரணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எப்போதும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கும் அவர், இறந்துவிட்டார் என்று கூறுவதை என்னால் நம்பவே முடியவில்லை. அவர் பொதுவாக வெளிப்படையாக தனது மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்ள மாட்டார். தனது மகளிடம் அனைத்தையும் பகிர்ந்திருப்பார் என்று எனக்கு தோன்றுகிறது. அதே நேரத்தில் மகனிடம் பகிர்ந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது" என்று கண்ணீருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். வடிவுக்கரசி பகிர்ந்துள்ள இத தகவல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசை பட்ட நடிகர் ராஜேஷ், அதற்கு முன்னதாகவே மறைந்து விட்டாரே என்று பலரும் வருத்தத்துடன் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X