twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் உயிர் வாழணும்.. எனக்கு தயவு செஞ்சு உதவி பண்ணுங்க..வைரலாகும் டிவி நடிகரின் உருக்கமான வீடியோ!

    By
    |

    மும்பை: தான் வாழ வேண்டும் என்று டிவி நடிகர் ஒருவர், உருக்கமாக வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

    ஆமிர்கான் நடித்த, மங்கள் பாண்டே, அக்னிபாத் 2, ஜான் டே உட்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருப்பவர் ராஜேஷ் காரீர்.

    ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், மும்பையில் தங்கி, சினிமா மற்றும் டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

    ஹேப்பி பர்த்டே மணிரத்னம்.. சிம்ரன் முதல் அருண் விஜய் வரை.. வாழ்த்திய பிரபலங்கள்!ஹேப்பி பர்த்டே மணிரத்னம்.. சிம்ரன் முதல் அருண் விஜய் வரை.. வாழ்த்திய பிரபலங்கள்!

    உருக்கமான வீடியோ

    உருக்கமான வீடியோ

    பல டிவி தொடர்களிள் நடித்துள்ள இவர், பெகசராய் என்ற தொடரில், நடிகைகள் சிவாங்கி ஜோஷி, ஸ்வேதா திவாரி ஆகியோருடன் நடித்திருந்தார். இந்த தொடர் கவனிக்கப்பட்டது. மேலும் சில தொடர்களில் நடித்துள்ள இவர், இந்தியில் பிரபலமான முகம். இவர், தனக்கு உதவி செய்யுமாறு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    லாக்டவுன்

    லாக்டவுன்

    அந்த வீடியோ வைரலாகி வருகிறது. லாக்டவுன் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களில் அவரும் ஒருவராக இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் உருக்கமாகக் கூறியிருப்பதாவது: நான் ஒரு நடிகன். என்னை பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த நேரத்திலும் இதை சொல்ல நான் தயங்கிக்கொண்டிருந்தால் என் வாழ்க்கை மோசமானதாக மாறிவிடும்.

    வாய்ப்பு இல்லை

    வாய்ப்பு இல்லை

    எனக்கு வேறு வழி தெரியாததால் முறையிடுகிறேன். எனக்கு உதவி தேவைப்படுகிறது. எனது பொருதாளர நிலை சிக்கலாக இருக்கிறது. கடந்த 15, 16 வருடமான மும்பையில் இருக்கிறேன். எனக்கு நீண்ட நாட்களாக நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. லாக்டவுன் முடிந்து சினிமா படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை.

    உதவி செய்யுங்கள்

    உதவி செய்யுங்கள்

    தொடங்கினாலும் வாய்ப்புக் கிடைக்குமா என்பதும் தெரியாது. இதனால் உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன். எனக்கு உதவி செய்யுங்கள். 300, 400, 500.. ரூபாய் என உங்களால் என்ன முடியுமோ அதை கொடுத்து உதவுங்கள். வாழ்க்கை ஸ்தம்பித்திருக்கிறது. என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் வாழ வேண்டும். இந்த வாழ்வை விட்டுவிட மனம் வரவில்லை.

    வங்கி எண்

    வங்கி எண்

    பணம் கிடைத்தால் பஞ்சாபில் உள்ள என் சொந்த ஊருக்குச் சென்றுவிடுவேன்' இவ்வாறு கண்ணீர் மல்க அவர் கூறியுள்ளார். கூடவே வங்கி எண்ணையும் போன் நம்பரையும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பலரது வாழ்க்கையை மொத்தமாகச் சுருட்டி போட்டிருக்கிறது. சினிமா தொழிலாளர்கள் பலர், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர்.

    English summary
    Rajesh Kareer, has taken to social media to seek financial help from people during the COVID-19 pandemic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X