தமிழ் சினிமாவிற்கு வரும் பிரபல நடிகர் ராஜேசின் வாரிசு

By Mayura Akilan

பிரபல நடிகர் ராஜேஸ் மகன் புதிய திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

கன்னி பருவத்திலே', 'அந்த 7 நாட்கள்' போன்ற வெள்ளி விழா படங்களில் நடித்தவர் ராஜேஷ். இவர் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது மகன் தீபக். இவர் 'பயணங்கள் தொடர்கின்றன' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

படபூஜையில் பிரபலங்கள்

படபூஜையில் பிரபலங்கள்

‘பயணங்கள் தொடர்கின்றன' திரைப்படத்திற்கான பூஜை ஏ.வி.எம். பிள்ளையார் கோவிலில் சமீபத்தில் பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

பாலுமகேந்திரா அட்வைஸ்

பாலுமகேந்திரா அட்வைஸ்

பழம் பெரும் இயக்குநர் பாலுமகேந்திரா தனது வாழ்த்துரையில் நடிகர் தீபக்கிற்கு ஆலோசனை வழங்கினார். பணம் குறைவாக கிடைக்கிறது என்பதற்காக நல்ல படங்களை ஒதுக்கிவிட வேண்டாம் என்று கூறினார்.

தலை சுற்றுகிறது

தலை சுற்றுகிறது

இப்போது உள்ள நடிகர்களின் சம்பளத்தைக் கேட்டால் தலை சுற்றி மயக்கம் வருகிறது. எனவே நிறைய பணம் கிடைக்கும் நிறுவனத்தை விட சம்பளம் குறைவானது என்றாலும் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்றார் பாலுமகேந்திரா.

கமலிடம் ஆசி

கமலிடம் ஆசி

பயணங்கள் தொடர்கின்றன படக்குழுவினர் உலகநாயகன் கமலஹாசனை சந்தித்து ஆசி பெற்றனர்.

அஞ்சனா மேனன்

அஞ்சனா மேனன்

தீபக் அறிமுகமாகும் படத்தில் ஜோடியாக அஞ்சனா மேனன் நடிக்கிறார். தேஸ்வின் பிரேம் இயக்குகிறார்.

நடிப்பு மீது ஆர்வம்

நடிப்பு மீது ஆர்வம்

மகன் நடிக்க வந்திருப்பது பற்றி கூறிய நடிகர் ராஜேஸ், சினிமா பின்னணி இருந்ததால் என் மகனுக்கு நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டது. ஒரு நாள் கேரளாவில் இருந்து வந்த பிரேம் என்னிடம் இந்த ஸ்கிரிப்டை காண்பித்தார். அப்போது இந்த கதைக்கு என்னுடைய மகன் பொருத்தமானவன் என்று நான் நினைத்தேன். எனவே இந்த படத்தில் அவனை அறிமுகம் செய்கிறேன். இந்தப் படம் அனைவரும் விரும்பும் விகையில் கமர்ஷியல் நிறைந்த படமாக இருக்கும் எனக்கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X