ரஜினியின் முதல் காதலி யார் தெரியுமா?.. மொத்த ரகசியத்தையும் உடைத்த பிரபல வில்லன் நடிகர்!

பெங்களூருவில் இருந்தபோது நிர்மலா எனும் பெண்ணை ரஜினி காதலித்ததாகவும், அவரை தேடி பல நாட்கள் அழைந்ததாகவும் பிரபல வில்லன் நடிகர் தேவன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Rajini's 1st Love : ரஜினியின் முதல் காதலி யார் என்பது தெரியவந்துள்ளது-வீடியோ

சென்னை: ரஜினியின் முதல் காதலி யார் என்பது தெரியவந்துள்ளது.

பாட்ஷா படத்தில் கேசவன் எனும் கதாபாத்திரத்தில் நக்மாவுக்கு அப்பாவாக நடித்தவர் பிரபல நடிகர் தேவன். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு சினிமாக்களில் நூற்றுக்கணக்கான படங்களில் தேவன் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் மலையாள இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது முதல் காதல் அனுபவம் பற்றி ரஜினி தன்னிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்களை அவர் வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது

பாட்ஷா படப்பிடிப்பு

பாட்ஷா படப்பிடிப்பு

"மும்பையில் பாட்ஷா படத்தின் படப்பிடிப்பில் நான் கலந்துகொண்டிருந்தேன். ஒருநாள் நடிகர் ரஜினிகாந்த், என்னையும், ஜனகராஜ் மற்றும் விஜயகுமாரை இரவு உணவுக்கு அழைத்திருந்தார். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பேச்சு காதல் பற்றி திரும்பியது.

முதல் காதல்

முதல் காதல்

அப்போது தான் ரஜினி தன்னுடைய முதல் காதல் பற்றி எங்களிடம் சொன்னார். ரஜினி பேருந்து நடத்துனராக பெங்களூருவில் வேலை பார்த்தபோது, மருத்துவ கல்லூரி மாணவி நிர்மலா என்பவர் தவறான பக்கமாக பேருந்தில் ஏறியிருக்கிறார். இதனால் கோபமான ரஜினி, அவரை திட்டினார். பதிலுக்கு அவரும் ரஜினியை திட்டினார்.

மோதல் டு காதல்

மோதல் டு காதல்

இந்த மோதல் நாளடைவில் நட்பாக மாறியிருக்கிறது. பிறகு அது காதலாக மலர்ந்திருக்கிறது. இவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

ரஜினியின் நடிப்பு

ரஜினியின் நடிப்பு

ஒருநாள் தன்னுடைய நாடகத்தை பார்க்க நிர்மலாவை கூட்டிச் சென்றிருக்கிறார் ரஜினி. அவரது நடிப்பை பார்த்து அசந்துபோன நிர்மலா, ரஜினியை சென்னைக்கு போய் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடும்படி கூறியிருக்கிறார். பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படிக்க ஆசைப்பட்ட ரஜினிக்கு ரூ.500 பணத்தையும் கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார் நிர்மலா.

நிர்மலாவை காணவில்லை

நிர்மலாவை காணவில்லை

சென்னை வந்த ரஜினி, சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து பெரிய நடிகார உயர்ந்த பிறகு, மீண்டும் பெங்களூரு சென்று நிர்மலாவை தேடியிருக்கிறார். ஆனால் அவர் குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு எங்கோ சென்றுவிட்டார்.

கதறி அழுத ரஜினி

கதறி அழுத ரஜினி

இதனால் மனமுடைந்த ரஜினி கதறி அழுது, காதல் தோல்வியால் நண்பர்களிடம் புலம்பியிருக்கிறார். எங்கு தேடியும் நிர்மலாவை ரஜினியால் சந்திக்கவே முடியவில்லை", என தேவன் கூறினார்.

முழு விவரம்

முழு விவரம்

எல்லோரையும் மகிழ்விக்கும் சூப்பர் ஸ்டாருக்குள் இப்படி ஒரு சோகமான காதல் கதை இருப்பது தேவனால் தற்போது தெரியவந்துள்ளது. ஒரு சில மேடைகளில் ரஜினியே இதுபற்றி லேசாக பேசியிருக்கிறார். ஆனால் இப்போது தான் அவரது முதல் காதல் அனுபவம் பற்றிய முழு விவரமும் தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Read more about: rajini devan ரஜினி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X