ஜெயிலர் படத்தின் அதிரடி ஆக்ஷன் சூட்டிங் இன்று துவக்கம்.. ஒரு வாரம் ரிகர்சல் செய்த ரஜினி!

சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் ஜெயிலர் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் பிரம்மாண்டமான ஜெயில் செட் போடப்பட்டு முன்னதாக நடத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது படத்தின் ஆக்ஷன் சீக்வென்சை படக்குழுவினர் அதிரடியாக படமாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், படம் வசூல்ரீதியான வெற்றியை தயாரிப்புத் தரப்பிற்கு கொடுத்துள்ளது. இந்நிலையில், அதே பேனரில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தனது ஜெயிலர் படத்திற்காக இணைந்துள்ளார்.

அடுத்தடுத்த இடங்களில் சூட்டிங்

அடுத்தடுத்த இடங்களில் சூட்டிங்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில், இந்தப் படத்தை மிகவும் கவனத்துடன் அவர் உருவாக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. சரியான திட்டமிடலுடன் சென்னை, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

 படத்தின் இணைந்த நட்சத்திரங்கள்

படத்தின் இணைந்த நட்சத்திரங்கள்

படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்களூரில் நடைபெற்ற சூட்டிங்கில் சிவராஜ்குமார், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இதையடுத்து தற்போது படத்தின் சூட்டிங் மைசூருவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள்

பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள்

இந்நிலையில் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் தற்போது பிரம்மாண்டமான அளவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் காட்சிகளுக்காக அதிகமான ஸ்டண்ட் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் இந்த ஆக்ஷன் காட்சிகளுக்காக ஒரு வாரம் ரிகர்சல் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

 வெற்றியை கொடுத்த பீஸ்ட்

வெற்றியை கொடுத்த பீஸ்ட்

முன்னதாக டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் நெல்சன் திலீப்குமார். விஜய்யை வைத்து அவர் எடுத்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூல்மழை பொழிந்தது. இதையடுத்து நெல்சன், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்களுடன் இணைந்து விஜய் சக்சஸ் பார்ட்டி கொண்டாடினார்.

 நெல்சன் சினிமாட்டிக் யூனிவர்ஸ்?

நெல்சன் சினிமாட்டிக் யூனிவர்ஸ்?

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நெல்சனின் முந்தைய படங்களின் கேரக்டர்களான, டாக்டர் வருண் மற்றும் வீரராகவனின் பங்களிப்பு இருக்கும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினி நடித்து வருகிறார். இந்நிலையில் நெல்சன் சைலண்டாக, தன்னுடைய நெல்சன் சினிமாட்டிக் யூனிவர்சை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X