Thalaivar170: திருவனந்தபுரம் சூட்டிங்கை நிறைவு செய்த தலைவர்170 டீம்.. அடுத்தது எங்க தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கொடுத்த அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து அவர் தன்னுடைய மகளின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர்170 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது.

Actor Rajinikanth and Thalaivar170 movie team wrapped up first schedule in Trivandrum

ரஜினியின் தலைவர்170 படத்தின் முதல்கட்ட சூட்டிங் நிறைவு: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தனர். படம் சர்வதேச அளவில் 700 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெற்றியை ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருடன் சன் பிக்சர்ஸ் பகிர்ந்துக் கொண்டது.

இந்தப்படத்தை தொடர்ந்து தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். படத்தில் கேமியோ ரோலில் அவர் நடித்துள்ள நிலையில், படத்தின் சூட்டிங் மும்பை, திருவண்ணாமலை, சென்னை போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங், டப்பிங் பணிகளை நிறைவு செய்துக் கொடுத்துள்ள ரஜினி, அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர்170 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் பூஜையுடன் துவங்கிய நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த சூட்டிங்கின் இடையில், கேரளாவிலிருந்து 2018 படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் ரஜினியை நேரில் சந்தித்ததை பார்க்க முடிந்தது. இதனிடையே திருவனந்தபுரத்தின் சூட்டிங் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்லை பனங்குடிக்கு ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக சென்றுள்ளனர்.

பனங்குடியில் தொழிற்சாலை ஒன்றில் அடுத்தக்கட்ட சூட்டிங் 3 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் மிகப்பெரிய ஆக்ஷன் காட்சி இந்த இடத்தில் நடத்தப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்திற்கு ஜெயிலர் படத்தை தொடர்ந்து அனிருத் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். முன்னதாக ஜெயிலர் படத்தில் ரஜினி மற்றும் சிவராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்களுக்காக அனிருத் போட்டிருந்த பிஜிஎம் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Actor Rajinikanth and Thalaivar170 movie team wrapped up first schedule in Trivandrum

அதே மேஜிக்கை தலைவர்170 படத்திலும் அனிருத் தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர்171 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் அறிவிப்பிற்கு முன்னதாக டைட்டில் டீசரை லோகேஷ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X