twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா நிதியுதவி.. தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ. 50 லட்சம்.. விக்ரம் ரூ. 30 லட்சம் நன்கொடை!

    |

    சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசுக்கு 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

    Recommended Video

    Chiyaan Vikram கொரோனா நிவாரண நிதியாக 30 லட்சம் வழங்கியுள்ளார் | MK Stalin, AIADMK

    தமிழகத்தில் கொரோனா இரண்டாவது உச்சத்தில் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன்... கொரோனா பாதிப்புக்கு ரூ.1 கோடி நிதியளித்த பாலிவுட் நடிகர் ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன்... கொரோனா பாதிப்புக்கு ரூ.1 கோடி நிதியளித்த பாலிவுட் நடிகர்

    இதனிடையே கொரோனா தடுப்பு நடிவடிக்கைகளுக்காக அதிக நிதி தேவைப்படுவதால் நிதி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

    ரஜினி ரூ. 50 லட்சம்

    ரஜினி ரூ. 50 லட்சம்

    இதனை தொடர்ந்து தமிழக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சினிமா துறையினர் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

    விக்ரம் ரூ30 லட்சம்

    விக்ரம் ரூ30 லட்சம்

    இதேபோல் நடிகர் விக்ரம் கொரோனா நிவாரண பணிகளுக்காக தமிழக அரசுக்கு 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். ஏற்கனவே நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளனர்.

    சவுந்தர்யா ரூ. 1 கோடி

    சவுந்தர்யா ரூ. 1 கோடி

    ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஆகியோர் தலா 25 லட்சம் வழங்கினர்.

    கலாநிதிமாறன் ரூ.10 கோடி

    கலாநிதிமாறன் ரூ.10 கோடி

    இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கினர். இதனிடைய சன்டிவி குழுமம் சார்பாக அதன் தலைவர் கலாநிதிமாறன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து 10 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளார்.

    English summary
    Actor Rajinikanth and Vikram donates for CM relief fund. Rajini donates Rs 50 lakhs and Vikram gives Rs 30 lakhs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X