அனிருத்தை கட்டியணைத்த ரஜினிகாந்த்.. பின்னாடி இருந்து பெருமையா பார்ப்பது யாருன்னு பாருங்க!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், அமிதாப்பச்சன், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.
இன்னும் சில தினங்களில் படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் படம் குறித்த பல சுவாரசியங்களை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சி சிறப்பாக களைகட்டியது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பல சுவாரஸ்யங்களை இணைத்துள்ளார் இயக்குநர் டிஜே ஞானவேல். வரும் அக்டோபர் 10ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று மாலை படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
ரஜினிகாந்த் -அமிதாப் காம்பினேஷன்: 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்துள்ள நிலையில், படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரஜினிகாந்த் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இதற்கு எதிரான கருத்துக்களை கொண்ட மேலதிகாரியாக நடிகர் அமிதாப்பச்சன் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டார். அமிதாப் நடித்துள்ள இந்தக் கேரக்டரில் நடிகர் சிவாஜி கணேசன் இருந்திருந்தால் அவர் தான் நடித்திருப்பார் என்று அவர் கூறியுள்ளார்.
வேட்டையன் ஆடியோ ரிலீஸ்: நேற்றைய தினம் ரஜினிகாந்த்தின் இந்த பேச்சு, அமிதாப்பச்சனின் கேரக்டர் மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் நாயகனான அனிருத்தை அடுத்தடுத்து ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பாராட்டியதை பார்க்க முடிந்தது. மனசிலாயோ பாடலில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஆட்டம் போட்டிருந்த மஞ்சு வாரியர், இந்த பாடலுக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சிக்கு வந்தவுடன் முதலில் இசையமைப்பாளர் அனிருத்தை கட்டியணைத்து ரஜினிகாந்த் உற்சாகம் தெரிவித்திருந்தார்.
அனிருத்தை கட்டியணைத்த ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் -அனிருத் இருவரும் ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பகிர்ந்த நிலையில், அனிருத்தின் அப்பாவும் நடிகருமான ரவிச்சந்தர் தன்னுடைய மகனின் இந்த வளர்ச்சியை பார்த்து பின்னால் இருந்து சந்தோஷமும் பெருமையும் பட்டதை பார்க்க முடிந்தது. முன்னதாக அனிருத் இசையமைப்பாளராக மாறுவதற்கு முன்பு அவர் வெளிநாட்டில் சென்று தன்னுடைய படிப்பை மேற்கொள்ளவே அவரது பெற்றோர் அவருக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் நடிகர் தனுஷ் தான் அனிருத் இசைத்திறமையை பார்த்து அவரை தன்னுடைய 3 படத்தில் இசையமைப்பாளராக்கியதாக கூறப்படுகிறது. தனுஷின் இந்த சரியான முடிவு தற்போது அனிருத்தின் வளர்ச்சியில் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











