twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜயகாந்த் எப்படி இருக்கிறார்? மைத்துனரிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!

    |

    சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயக்காந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவரது உடல் நிலை குறித்து குடும்பத்தாரிடம் விசாரித்துள்ளார்.

    நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயக்காந்துக்கு கடந்த 22ஆம் ஆம் தேதி லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    தீபிகா படுகோனே தான் அட்மினாம்.. போதைப் பொருள் வாட்ஸ்அப் சாட் தொடர்பாக வெளியான பரபரப்பு தகவல் தீபிகா படுகோனே தான் அட்மினாம்.. போதைப் பொருள் வாட்ஸ்அப் சாட் தொடர்பாக வெளியான பரபரப்பு தகவல்

    மருத்துவமனை அறிக்கை

    மருத்துவமனை அறிக்கை

    மருத்துவமனையும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தது. மேலும் விரைவில் விஜயகாந்த் பூரண குணமடைவார் என்று எதிர்பார்ப்பதாகவும் மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்தது.

    நலம் பெற வேண்டும்

    நலம் பெற வேண்டும்

    இதனை தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும திரைத்துறை பிரபலங்கள் என பலரும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அவர் நலம் பெற வேண்டும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த்

    நடிகர் ரஜினிகாந்த்

    இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சரத்குமார் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என டிவிட்டரில் பதிவிட்டனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்துள்ளார்.

    நலம் விசாரிப்பு

    நலம் விசாரிப்பு

    விஜயகாந்தின் மைத்துனரான சுதீஷை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தின் உடல் நிலை குறித்து கேட்டுள்ளார். விஜயகாந்த் எப்படி இருக்கிறார்? என்று ரஜினிகாந்த் கேட்டதாகவும் அதற்கு சுதிஷ், ‘விஜயகாந்த் நல்ல உடல் நிலையில் இருக்கிறார் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    Actor Rajinikanth asked about Vijayakanth heath condition to Sudheesh. Vijayakanth tested covid positive and admitted in hospital.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X