விண்வெளி அறிவியல்.. திடீரென வந்த ரஜினிகாந்த்.. கண்காட்சியில் மாணவர்கள் ஹேப்பி!

சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள ஆஷ்ரம் பள்ளியில் விண்வெளி அறிவியல் பாடம் தொடர்பாக நடைபெறும் கண்காட்சியில் நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டு பார்வையிட்டு மகிழ்ந்தனர். அடுத்த மாதம் ஜூன் 10ந் தேதி வரை நடைபெறும் இந்த காட்சிக்கு எந்தவிதமான கட்டணமும் இல்லை என்று ஆஷ்ரம் பள்ளி அறிவித்துள்ளது.

ஸ்பேஸ் செக் கிரியேஷன்ஸ் சார்பில் வேளச்சேரியில் உள்ள ஆஷ்ரம் பள்ளியில் விண்வெளி அறிவியல் பாடம் தொடர்பாக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இருவரும் பார்வையிட்டு மாணவர்களை வாழ்த்தினார். இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பார்த்து மகிழலாம் என்றும், இதற்கு எந்த விதமான கட்டணமும் இல்லை, இது முற்றிலும் இலவசமான கண்காட்சியாகும். அடுத்த மாதம் ஜூன் 10ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்த அறிவியல் கண்காட்சியில், ராக்கெட், தொலைநோக்கு உருவாக்கும் திறந்தவெளி திரையரங்கம், நிலவில் விக்ரம் லாடர் தரை இறங்கிய பகுதியின் மாதிரி அறை, ஏராளமான விண்வெளி அதிசயமான பொருட்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

Rajinikanth jailer 2 2

அறிவியல் கண்காட்சி: விண்வெளி அறிவியல் கண்காட்சி குறித்து மாணர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஸ்ரீ தயா பவுண்டேஷன், பாரத் சேவா செயல் திட்டம் மூலம் ஆஷ்ரம் பள்ளியின் நிர்வாகத்தால் இந்த கண்காட்சியை நடத்தப்பட்டு வருவதாக இந்த பள்ளியின் தலைமை நிர்வாகி தீபக் கூறி இருந்தார். இந்த கண்காட்சியைக் காண ரஜினிகாந்த் வந்திருந்த நிலையில், ஏராளமான மாணவர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ரஜினி கொடுத்த அப்டேட்: நடிகர் ரஜினிகாந்த தற்போது, நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தமிழ்நாடு - கேரளா எல்லைக்கு உட்பட்ட ஆனைகட்டி பகுதியில் நடந்தது. இதன் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடியும் என்று சரியாக சொல்ல முடியாது. ஆனால், டிசம்பர் மாதம் முடிவடைய வாய்ப்பு உள்ளது. படமும் நன்றாக வந்துள்ளது என்றார். ஜெயிலர் முதல் பாகத்தில் இசையமைத்த அனிருத் தான், ஜெயிலர் இரண்டாம் பாகத்திலும் இசையமைக்க உள்ளார். மேலும், ஜெயிலர் 1ல் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன், மருமகளாக நடித்திருந்த மிர்னா மோகன் ஆகியோர் அதே கதாப்பாத்திரங்களில் தொடர உள்ளனர். மோகன் லால், சிவராஜ் குமார் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி: ஜெயிலர் 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த் பிரேக் எடுக்க போவதாகவும், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு, தனக்கு ஓய்வு தேவை என்று ரஜினி முடிவு செய்துள்ளதாக இணையத்தில் செய்தி பரவியதால், ரசிகர்கள் கவலை அடைந்தனர். ஆனால், இதனை ரஜினிகாந்தின் மனைவி லதா மறுத்தார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்த் ஓய்வை பற்றி இன்னும் யோசிக்கவே இல்லை. இன்னும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றார். இதனால், ரஜினியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X