விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும் ஒருதுளி ரத்தத்தை நம்மால் தயாரிக்க முடியுமா.. ரஜினி கேள்வி!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 169வது படமாக ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக 170வது படத்தின் அறிவிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தன்னுடைய வயதையும் மீறிய சுறுசுறுப்பை அவரிடம் பார்க்க முடிகிறது. சூட்டிங்கின்போது அவரது எனர்ஜி லெவல் குறையாமல் இருக்கும் என்று அவருடன் பணிபுரியும் சக நடிகர்கள் கூறுவதை பார்க்க முடிகிறது.
சக நடிகர் நடிகைகளின் சுக துக்கங்களில் பங்கேற்பதை வாடிக்கையாக கொண்டுள்ள ரஜினிகாந்த், தனியார் நிகழ்ச்சிகளிலும் இசை வெளியீடுகளிலும் பங்கேற்று வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்களில் துவங்கிய பயணத்தை நீண்ட நெடுங்காலங்களாக சிறப்பான வகையில் தொடர்ந்து வருகிறார். சூப்பர் ஸ்டார் என்ற தன்னுடைய பெயருக்கு ஏற்ப அனைவருக்கும் சூப்பர் ஸ்டாராகவே திகழ்ந்து வருகிறார். தற்போது தன்னுடைய 169வது படத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 170வது படத்தின் அறிவிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.

சிறந்த நடிகர் + சிறந்த மனிதர்
சிறந்த நடிகராகவும் சிறந்த மனிதராகவும் தன்னை வெளிப்படுத்தி வருகிறார் ரஜினிகாந்த். சக நடிகர், நடிகைகளின் சுக துக்கங்களில் நேரடியாக சென்று பங்கேற்கும் வழக்கதை பின்பற்றி வருகிறார். அந்த வகையில் நடிகை மீனாவின் கணவர், மயில்சாமி போன்றவர்களின் மறைவிற்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், நயன்தாராவின் திருமணத்திலும் நேரில் சென்று வாழ்த்தியதுடன், தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்திக் கொடுத்தார்.

அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
இதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சிலும் நடிகர் கமல்ஹாசனுடன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சி சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கமல்ஹாசனை காட்டிலும் அதிகமாக பேசி, அதிகமான சுவாரஸ்யங்களை பகிர்ந்து களைகட்ட வைத்தார் ரஜினிகாந்த். அவர் பேசி முடிக்கும் வரை கமல்ஹாசனும் மேடையிலேயே நின்றுக் கொண்டிருந்தது நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கியது.

தனியார் அறக்கட்டளை நிகழ்ச்சி
இந்நிலையில் தற்போது ஜெயிலர் சூட்டிங்கில் பிசியாக இருந்தபோதிலும் தனியார் அறக்கட்டளையின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த், சிறப்பான பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். எண்ணங்கள் நன்றாக இருந்தால் மனது நன்றாக இருக்கும், மனது நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற தத்துவத்தை அவர் மேடையில் பேசியபோது, ரசிகர்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.

ரத்தத்தை தயாரிக்க முடியாது
நிகழ்ச்சியில் ஆன்மீகம் குறித்தும் பேசிய ரஜினிகாந்த், விஞ்ஞானம் இவ்வளவு வளர்ச்சி அடைந்த போதிலும் ஒருதுளி ரத்தத்தை நம்மால் தயார் செய்ய முடியாது என்று கூறினார். இதெல்லாம் தெரிந்திருந்தும் சிலர் கடவுள் இல்லை என்று கூறுவதை சுட்டிக் காட்டிய ரஜினிகாந்த், இதைப் பார்த்தால், சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார். தான் அரசியலுக்கு வராமல் போனதற்கு தன்னுடைய உடல்நலம் தவிர்த்து மற்ற காரணங்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.

வெங்கையா நாயுடு அட்வைஸ்
நிகழ்ச்சியில் மற்றொரு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அரசியலுக்கு வராமலேயே பொதுமக்களுக்கு நல்லது செய்யலாம் என்றும் அரசியலுக்கு ரஜினிகாந்த் வரவேண்டாம் என்றும் நண்பர் என்ற முறையில் அவருக்கு தான் ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார். இந்த தனியார் அறக்கட்டளை சார்பில் உப்பை குறைப்போம், ஆயுள் அதிகரிப்போம் என்ற வாசகத்தை மக்களிடையே கொண்டு செல்ல ரஜினிகாந்த் சபதமேற்றுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











