தைரியமா இருங்க முரளி.. உங்களுக்கு ஒன்னும் ஆகாது.. ஆண்டவன வேண்டிக்கிறேன்.. வைரலாகும் ரஜினியின் ஆடியோ!
சென்னை: நடிகர் ரஜினிகாந்து தனது ரசிகருக்காக வெளியிட்ட ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கோலொச்சி வரும் நடிகர் ரஜினிகாந்து இன்னமும் சினிமாவில் துடிப்புடன் நடித்து வருகிறார்.
70வயதை கடந்த போதும் இன்னமும் ஒரு இளைஞரை போல இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். சினிமா இன்டஸ்ட்ரியிலும் பிஸ்னஸ் கிங்காக உள்ளார் ரஜினிகாந்த்.

விரைவில் படப்பிடிப்பு
தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதில் தனது போர்ஷனில் 50 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார் ரஜினிகாந்த். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர் உருக்கம்
நடிகர் ரஜினிக்காந்துக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் முரளி எனும் ரசிகர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அந்த ரசிகர், ரஜினிகாந்தை டேக் செய்து உருக்கமாக டிவிட்டியிருந்தார்.

அரியணையில் ஏற்ற..
அதாவது, @rajinikanth தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25000 என்ற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒன்னும் ஆகாது கண்ணா
இதனை பார்த்த நடிகர் ரஜினிக்காந்த் அந்த ரசிகரை ஊக்கப்படுத்தும் வகையில் பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் ரஜினி பேசியிருப்பதாவது, முரளி.. உங்களுக்கு ஒன்னும் ஆகாது கண்ணா.. தைரியமா இருங்க.. நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். நீங்க சீக்கிரம் குணமடைந்து வீட்டுக்கு வந்துடுவீங்க.

ஆண்டவன வேண்டிக்கிறேன்
நீங்க குணமடைஞ்சு வந்த பிறகு ப்ளீஸ் வீட்டுக்கு குடும்பத்தோட வாங்க.. நான் உங்களை பாக்குறேன்.. தைரியமா இருங்க.. ஆண்டவனை வேண்டிக்கிறேன்... தைரியமா இரு கண்ணா தைரியமா இரு.. வாழ்த்துகள்.. இவ்வாறு அந்த ஆடியோவில் உள்ளது.
Recommended Video

அதிசயம் நடந்தது
இந்நிலையில் அந்த ரசிகர் தற்போது லேட்டஸ்ட் டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், '' @rajinikanth ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னியும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி." என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











