Rajinikanth: பேரன்களுடன் தீபாவளியை கொண்டாடிய சூப்பர்ஸ்டார்.. சும்மா அதிருதில்ல!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் தன்னை இணைத்து வருகிறார்.

சமீபத்தில் அவரது ஜெயிலர் படம் வெளியாகி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து 600 கோடிகளை தாண்டி வசூலித்தது.

Actor Rajinikanth celebrates Diwali with his grand sons

இந்நிலையில் அடுத்ததாக அவர் தனது மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயலர் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளது. இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக தன்னுடைய மகன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு காரணமானவர்களை பழிவாங்க களமிறங்கும் ரஜினிகாந்த், மகன் குறித்த உண்மை தெரியவந்து, தொடர்ந்து தன்னுடைய மகனுக்கு எதிராகவே செயல்படுவதாக திரைக்கதை காணப்பட்டது. இந்தப் படத்தில் ரஜினியின் எமோஷனல் மற்றும் ஸ்டைலிஷ் நடிப்பு ரசிகர்களை கொண்டாட வைத்தது.

லால் சலாம் படம்: இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியின் நடிப்பில் லால் சலாம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து பொங்கலையொட்டி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசர் நேற்றைய தினம் தீபாவளியையொட்டி வெளியாகி ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.

Actor Rajinikanth celebrates Diwali with his grand sons

தலைவர் 170 படம்: இந்தப் படத்தையடுத்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் ரஜினி. தொடர்ந்து தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் இணையவுள்ளார். இந்தப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதனிடையே ஞானவேல் -ரஜினி கூட்டணியில் உருவாகிவரும் தலைவர் 170 படமும் அதிகமாக எதிர்பார்ப்புடன் சூட்டிங் நடைபெற்று வருகின்றன.

பேரன்களுடன் தீபாவளி கொண்டாட்டம்: இதனிடையே நேற்றைய தினம் தீபாவளியையொட்டி தன்னுடைய பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் ரஜினி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரஜினி வேட்டி -சட்டையில் காணப்பட்டநிலையில் மூத்த பேரன் யாத்ராவும் வேட்டி சட்டையில் காணப்பட்டார். இந்த புகைப்படத்தில் லிங்கா மற்றும் யாத்ரா இடையில் ஏதோ பேச்சுவார்த்தை நடக்க அதை ரசித்து பார்க்கிறார் ரஜினிகாந்த்.

தலைவர் 171 படம்: தற்போது ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திலும் போலீஸ் அதிகாரியாக அவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அடுத்த ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இவரை வைத்து வித்தியாசமான முயற்சியாக படத்தை உருவாக்கவுள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் கதையை கேட்டுவிட்டு தன்னை ரஜினி கட்டித் தழுவியதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X