Rajinikanth: சவுண்ட ஏத்து.. கூலி டீமுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்!
ஜெய்ப்பூர்: நடிகர் ரஜினிகாந்த் இன்றைய தினம் தன்னுடைய 74வது பிறந்த நாளை கொண்டாடி வரும் சூழலில் அவருக்கு ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தற்போது ஜெய்ப்பூரில் கூலி படத்தின் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் உள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ள நிலையில் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் இரு தினங்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் துவங்கியுள்ள நிலையில் அமீர்கான் உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினிகாந்துடன் சூட்டிங்கில் இணைந்துள்ளனர். இதனிடையே சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பிறந்தநாளை படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: நடிகர் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாள் இன்றைய தினம் அவரது ரசிகர்கள் உள்ளிட்டவர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. இதையொட்டி நடிகர்கள் தனுஷ் உள்ளிட்டவர்களும் ரஜினிகாந்த்துக்கு சமூக வலைதளம் மூலம் சிறப்பான வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.இந்நிலையில் கூலி படத்தின் பாடல் கிளிம்ப்ஸ் இன்று மாலை ரஜினி பிறந்த தினத்தை ஒட்டி வெளியாகி மிகப்பெரிய வைபை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. அனிருத் எப்போதுமே ரஜினிக்கு என்றால் தனியாக ஸ்பெஷலாக இசையை கொடுப்பார் என்ற கமெண்டை இந்த படத்திலும் அவர் நிரூபித்துள்ளார்.

ரஜினி கேக் வெட்டி கொண்டாட்டம்: இந்நிலையில் இன்றைய தினம் கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவனில் வைத்து கேக் வெட்டி ரஜினிகாந்த் தன்னுடைய பிறந்த நாளை படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாளில் ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் மணிரத்னத்துடன் அவர் இணைய உள்ள படத்தின் அப்டேட் என அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்க நிலையில் அவற்றுக்கு எல்லாம் சேர்த்தாற்போல கூலி படத்தின் பாடல் தற்போது வெளியாகி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சந்திப் பிசினும் கூலி படத்தின் சூட்டிங் ஸ்பாட் டில் ரஜினிகாந்த், லேகேஷ் கனகராஜுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்: இன்றைய தினம் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை ட்ரெண்ட் ஆக்கினார். ஆண்டுதோறும் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு ரசிகர்கள் செல்வது வாடிக்கையாக உள்ள நிலையில் இன்றைய தினமும் அவர்கள் சென்று அங்கு ரஜினிகாந்தின் போஸ்டர்களை ஒட்டி அவற்றுக்கு முத்தம் கொடுத்ததையும் பார்க்க முடிந்தது. மேலும் ரஜினிகாந்தின் ஸ்டைலை தாங்களும் மேற்கொண்டு அவர்கள் அடுத்தடுத்து ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். எத்தனை வயதானாலும் ரஜினிகாந்த் தான் ஒரே சூப்பர் ஸ்டார் என்றும் அவர்கள் தங்களது வெறித்தனமான அன்பை வெளிப்படுத்தினர்.
அடுத்த ஆண்டு ரிலீஸ்: அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக கூலி படம் வெளியாகவுள்ளநிலையில் அடுத்தடும் சன் பிக்பாஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் வெளியான இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய மாஸ் ஹிட்டை கொடுத்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான வேட்டையன் படமும் அதே போன்றதொரு வசூலையும் வெற்றியையும் குவித்தது.


Click it and Unblock the Notifications











