வேட்டையன் டீமுக்கு பிரியாணி விருந்து.. பிளேட் பிளேட்டாக பரிமாறிய இயக்குநர் & நடிகை.. கொல மாசு சாரே!
சென்னை: நடிகர்ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான நிலையில், இந்தப் படத்தின் வசூல் கடந்த 10 நாட்களில் மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. கடந்த 10 நாட்களில் 232 கோடி ரூபாய் வரையில் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான வேட்டையன் படம் ஜெயிலர் படத்தை வசூலில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வசூல் குறைவு தான் என்ற போதிலும் தயாரிப்பாளருக்கு இந்தப் படம் லாபத்தையே கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாகவே டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ் எனவும் வேட்டையன் கல்லா கட்டியது.

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. கடந்த ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் அதிரிபுதிரி வெற்றியையும் வசூலையும் குவித்தது. இதையடுத்து வெளியான லால் சலாம் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. இந்தப் படத்தில் கேமியோ கேரக்டரிலேயே ரஜினி நடித்திருந்ததால் அடுத்ததாக அவரது நடிப்பில் கடந்த 10ம் தேதி ரிலீசான வேட்டையன் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிறப்பான சமூக கருத்துக்களை இணைத்திருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த்: இதனிடையே, ரஜினியின் மாஸ் இந்தப் படத்தில் குறைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் இந்தப் படம் ரஜினி ரசிகர்களை அதிகமாக கவரவில்லை. படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கருத்துக்களை புகுத்தியிருந்தார் டிஜே ஞானவேல். படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், ராணா, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்த நிலையில், கடந்த 10ம் தேதி ரிலீசான இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ரஜினி, அமிதாப்பச்சன், பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் அதிகமாக ரசிகர்களை கவர்ந்திருந்தனர்.
வேட்டையன் டீமுக்கு பிரியாணி விருந்து: இந்தப் படம் வெளியாகி கடந்த 10 நாட்களில் 232 கோடி ரூபாய் கலெக்ஷனை பெற்றுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிவரும் இந்தப் படம் முதல் வாரத்தை காட்டிலும் இரண்டாவது வாரத்தில் வசூலில் குறைந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்றைய தினம் இந்தப் படத்தின் தேங்க்ஸ் கிவ்விங் மீட் நடத்தப்பட்டுள்ளது. இதில் இயக்குநர் டிஜே ஞானவேல், நடிகை ரித்திகா சிங் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று படம் குறித்த சுவாரஸ்யங்களை அடுத்தடுத்து பேசினர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.
நன்றி தெரிவிக்கும் விழா: இதில் பங்கேற்ற படக்குழுவினருக்கு ரித்திகா சிங் மற்றும் டிஜே ஞானவேல் இருவரும் பிரியாணியை பிளேட்களில் வைத்து பரிமாறினர். இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக தற்போது ஓய்வில் உள்ள அவர், ஓய்வில் உள்ள நிலையில், அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்த சக்சஸ் மீட்டில் படத்தின் இயக்குநர் டிஜே ஞானவேல் மற்றும் நடிகை ரித்திகா சிங்கே அனைவரையும் கவர்ந்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











