பாட்ஷா இஸ் பேக்.. வயசானாலும் ஸ்டைலும் வேகமும் குறையவே இல்ல.. தெறிக்கவிடும் ரஜினியின் வீடியோ!
சென்னை: சென்னை திரும்பியுள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீடியோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.
அண்ணாத்த படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 19ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார்.
தனது மனைவி லதாவுடன் சென்னையில் இருந்து தோஹா சென்ற ரஜினிகாந்த், அங்கிருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார்.

படையப்பா ஸ்டைலில் சல்யூட்
ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டது முதலே அவரது வீடியோக்களும் போட்டோக்களும் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. தோஹா விமான நிலையத்தில்
படையப்பா ஸ்டைலில் நடிகர் ரஜினிகாந்த் சல்யூட் அடித்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை திக்கமுக்காடச் செய்தது.

ராசெஸ்டர் கிளினிக்
அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் மருத்துவ பரிசோதனை முடித்துக்கொண்டு வெளியே வந்த போட்டோக்கள் வெளியானது. அந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் ட்ரென்ட்டானது.

பாட்ஷா ஸ்டைலில்
தொடர்ந்து அமெரிக்காவில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களை சந்தித்தார். அந்த போட்டோக்களும் இணையத்தை திணறடித்தது. இந்நிலையில் கால் மேல கால் போட்டு ரஜினிகாந்த் ஸ்டைலாய் அமர்ந்திருக்க அவருக்கு அருகே செல்லப்பிராணியான நாய் இருக்கும் போட்டோ வெளியானது.

சென்னை திரும்பிய வீடியோ
இந்த போட்டோ பாட்ஷா படத்தை நினைவுப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ட்ரேட் மார்க் நடை
அதில் நடிகர் ரஜினிகாந்த் நீல நிற டிஷர்ட் அணிந்து க்ராஸாக பேக்கை அணிந்தப்படி ஷூ, கேப் என அட்டகாசமாக வருகிறார். தனது ட்ரேட் மார்க் ஸ்பீடு நடையுடன் ஸ்டைலாக ரஜினிகாந்த் நடந்து வருவதை பார்த்த ரசிகர்கள் தலைவா தலைவா என கத்தி ஆர்ப்பரிக்கின்றனர்.

பாட்ஷா வீடியோ
ரசிகர்களை பார்த்தப்படியே வணக்கம் வைத்தப்படி வரும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு காரில் ஏறுகிறார். இந்த வீடியோவுக்கு பின்னணியில் பாட்ஷா மற்றும் படையப்பா படங்களின் தீம் மியூஸிக் ஒலிக்க எடிட் செய்து வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

பாட்ஷா இஸ் பேக்
பாட்ஷா இஸ் பேக் என இந்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் #Rajinikanth என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது.


Click it and Unblock the Notifications











