அமெரிக்காவின் மயோ கிளினிக்கில் மகளுடன் ரஜினிகாந்த்.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவின் மயோ கிளினிக்கில் இருந்து வெளியே வரும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

கடந்த டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் ஹைத்ராபாத்தில் படப்பிடில் பங்கேற்றிருந்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடல்நலக்குறைவு

உடல்நலக்குறைவு

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், மருத்துவமனையில் 3 நாட்கள் சிகிச்சை பெற்றார். அப்போதே நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வார் என கூறப்பட்டது.

கடந்த மாதம் நிறைவு

கடந்த மாதம் நிறைவு

ஆனால் 2 மாதங்கள் ஓய்வெடுத்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் கடந்த மாதம் நிறைவடைந்தது.

போக்குவரத்து தடை

போக்குவரத்து தடை

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வார் என தகவல் வெளியானது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக தற்போது வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் தேதி

கடந்த 19ஆம் தேதி

இதன் காரணமாக தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல மத்திய அரசிடம் அனுமதி கோரினார் நடிகர் ரஜினிகாந்த். மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.

மனைவியுடன் புறப்பட்ட ரஜினி

மனைவியுடன் புறப்பட்ட ரஜினி

சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் மனைவி லதாவுடன் காரில் வந்திறங்கிய போட்டோக்கள் வீடியோக்கள் வைரலானது. தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து கத்தார் தலைநகர் தோஹா சென்றார்.

படையப்பா ஸ்டைலில் சல்யூட்

படையப்பா ஸ்டைலில் சல்யூட்

தோஹா விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டரி காரில் இருந்தப்படியே படையப்பா பட ஸ்டைலில் ரசிகர்களுக்கு ராயல் சல்யூட் அடித்தார். பேட்டரி காரில் அமர்ந்தப்படி நடிகர் ரஜினிகாந்த் சென்ற வீடியோக்களும் சல்யூட் அடிக்கும் வீடியோக்களும் பெரும் வைரலானது.

மயோ கிளினிக்

மயோ கிளினிக்

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், அமெரிக்க மருத்துவ பரிசோதனையை முடித்து விட்டு வெளியே வரும் போட்டோ வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்காவின் மயோ கிளினிக்கில் மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டு மகள் ஐஸ்வர்யாவுடன் வெளியே வருகிறார் ரஜினிகாந்த்.

3 வாரங்கள் ஓய்வு

3 வாரங்கள் ஓய்வு

இந்த போட்டோவை யாரோ ஒரு ரசிகர் எடுத்ததாக தெரிகிறது. இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 3 வாரங்கள் அமெரிக்காவில் ஓய்வெடுப்பார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X