Rajinikanth: வேட்டையன் பட சூட்டிங்கை நிறைவு செய்த ரஜினிகாந்த்.. அடுத்தது என்ன.. அட கூலி படம்தான்!

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி. மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் வேட்டையன். இந்த படத்தை முன்னதாக ஜெய் பீம் படம் மூலம் அதிகமான கவனத்தை ஈர்த்த இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மும்பை, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

இன்னும் சில தினங்கள் வேட்டையன் படத்தின் பேட்ச் வேலைகள் நடைபெற உள்ளதாகவும் இதையடுத்து படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படம் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலி என்கவுண்டருக்கு எதிரான இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் இளமையான தோற்றத்தில் காணப்படுகிறார்.

Actor Rajinikanth completes his portions for Vettaiyan and the team celebrates

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். முன்னதாக கடந்த வருடத்தில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த ஜெயிலர் படமும் கடந்த பிப்ரவரியில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்திருந்த லால் சலாம் படமும் வெளியாகி இருந்தது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் இணைந்து நடித்து வந்தார். இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாபச்சன், மஞ்சு வாரியர். ரித்திகா சிங் ராணா டகுபாட்டி உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்து வந்தனர்.

சூட்டிங்கை நிறைவு செய்த ரஜினி: படத்தின் சூட்டிங் மும்பை, சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்து வந்த சூழலில் இன்றைய தினம் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்துள்ளார். தொடர்ந்து ரஜினிக்கு படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். படத்தில் சில பேட்ச் வேலைகளை தொடர்ந்து படக்குழுவினர் மேற்கொள்ளதாகவும் விரைவில் அவற்றை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளை துவங்க உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படம் தீபாவளியையொட்டி வரும் அக்டோபர் மாத இறுதியில் வெளியாக உள்ளதாக முன்னதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

வேட்டையன் படம்: இதையடுத்து படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்ததாக படத்தின் டீசர் அல்லது ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலி என்கவுண்டர் மற்றும் கல்விக்கு எதிரான பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டிய சூழலில் படம் ஜெயிலர் படத்தை போலவே மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கூலி படம்: இந்தப் படத்தை முடித்துள்ள ரஜினிகாந்த் அடுத்த மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் டைட்டில் பிரமோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தில் நெகட்டிவ் ஷேடில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இந்தப் படம் ரஜினிகாந்த் கேரியரில் மிகவும் வித்தியாசமாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X