என்னுயிர் நண்பா.. இதயமே நொறுங்கிப்போச்சு.. ரிஷி கபூர் மரணத்தால் ஷாக்கான ரஜினி.. டிவிட்டரில் இரங்கல்!
சென்னை: பிரபல பாலிவுட் நடிகரும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான ரிஷி கபூரின் மறைவால் நடிகர் ரஜினிகாந்த் அதிர்ச்சியடைந்துள்ளார்.
Recommended Video
1970 மற்றும் 80 களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரிஷி கபூர். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் இயக்குநர் என பல வெற்றிக்களை கண்டவர்.
தனது தந்தை ராஜ் கபூரின் மேரா நாம் ஜோக்கர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து 1970ஆம் ஆண்டிலேயே தேசிய விருதை பெற்ற நடிகர் என்ற பெருமைக்கு உரியவர் ரிஷி கபூர்.

ரிஷி கபூர் மரணம்
கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார். இந்நிலையில் நேற்று அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் ஹெச் என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரிஷி கபூர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை ரிஷி கபூர் மரணமடைந்தார்.

பெரும் அதிர்ச்சி
நேற்று பிரபல நடிகரான இர்பான் கான் மரணமடைந்தார். அவரது மரணத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது மேலும் ஒரு புகழ்பெற்ற நடிகரான ரிஷி கபூர் மரணமடைந்திருப்பது பாலிவுட் சினிமிவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி இரங்கல்
அவரது மறைவுக்கு திரை பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும் ரிஷி கபூரின் நண்பர்களில் ஒருவருமான நடிகர் ரஜினிகாந்த், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதயமே நொறுங்கிப்போச்சு
இது தொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், இதயமே நொறுங்கிப் போச்சு.. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.. என்னுயிர் நண்பா.. என ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார். ரிஷி கபூர், ரஜினிகாந்த் ஆகியோர் ஒரு காலத்தில் அவரவர் துறையில் உச்சத்தில் இருந்த நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











