Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என் அருமை நண்பரின் மறைவு வருத்தமளிக்கிறது... நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!
சென்னை: பழம் பெரும் நடிகர் ஸ்ரீகாந்தின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த் மூத்த பழம்பெரும் நடிகர்களில் ஒருவர். 1965 ஆம் ஆண்டு வெளியான 'வெண்ணிற ஆடை' படத்தின் மூலம் அறிமுகமானார்.
சுமார் 200 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீகாந்த். குணச்சித்திர மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் பல படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீகாந்த்.

தொடர்ந்து சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் என அக்கால நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீகாந்த். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ஸ்ரீகாந்த்.
76 வயதான ஸ்ரீகாந்த், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பழம் பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும், ஸ்ரீகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.. என குறிப்பிட்டுள்ளார்.
சைமா
விழாவில்
7
விருதுகள்..
தட்டித்தூக்கிய
சூரரைப்போற்று
டீம்..
குவியும்
வாழ்த்துகள்!
நடிகர் ஸ்ரீகாந்த் ரஜினிகாந்துடன் பைரவி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் தங்கப் பதக்கம் படத்தில் நடித்திருந்தார் ஸ்ரீகாந்த். இந்த இரண்டு படங்களுமே பெரும் வெற்றிப் பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.