Rajinikanth: மறக்க முடியாத நாள்.. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு புறப்பட்ட ரஜினிகாந்த்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருவதுடன் பொது வெளிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அடுத்தடுத்த பொது நிகழ்ச்சிகளில் ரஜினியை பார்க்க முடிகிறது. 70 வயதுகளில் உள்ள ரஜினிகாந்தின் சுறுசுறுப்பு அவரது ரசிகர்களுக்கும் உத்வேகத்தை கொடுத்து வருகிறது. இந்நிலையில் அவருக்கு அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இன்றைய தினம் அவர் அயோத்திக்கு புறப்பட்டு சென்றார். சில தினங்களுக்கு முன்பு அவருக்கு இந்த விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவரது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த், காரில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ரஜினிகாந்த், இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான நாள் என்று தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்திய அளவில் ஏராளமான திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில்: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா நாளைய தினம் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. நாளை பிற்பகலில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்திய அளவில் திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டுத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்கள், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

ராமர் கோயில் கும்பாபிஷேகம்: இந்நிலையில் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய தினம் அயோத்திக்கு புறப்பட்டு சென்றார். சில தினங்களுக்கு முன்பு அவரை வீட்டில் சந்தித்த ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா நிர்வாகிகள் அவருக்கு ராமர் கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்கள். இந்நிலையில் இன்றைய தினம் சென்னை விமான நிலையத்திலிருந்து ரஜினிகாந்த் அயோத்திக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக வீட்டிலிருந்து புறப்பட்ட ரஜினிகாந்த், காரில் இருந்தபடியே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ரஜினிகாந்த் உற்சாகம்: ராமஜென்ம பூமிக்கு செல்வதில் மிக்க மகிழ்ச்சி என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த், மக்களின் நீண்டநாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளதாகவும் இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான நாள் என்றும் தெரிவித்துள்ளார். 500 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்றுவந்த இந்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தீர்வு கொடுத்ததையும் ரஜினிகாந்த் சுட்டிக் காட்டியுள்ளார். முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அயோத்திக்கு சென்றிருந்தார் ரஜினிகாந்த். அப்போது அவர் ராமர் கோயிலின் வடிவமைப்பு குறித்து சிலாகித்து பேசியதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

குடும்பத்தினருடன் பயணம்: இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் திறப்பு விழாவிற்கும் சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், அவரது பேரன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரும் புறப்பட்டு சென்றனர். நாடு முழுவதிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள் அயோத்திக்கு வருகை தருவதால் அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











