Actor Rajinikanth: ஜூன் 10ம் தேதி துவங்கும் கூலி பட சூட்டிங்.. வேட்டையன் ரிலீஸ் அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் இணைந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய மாஸ் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளில் தற்போது நெல்சன் திலிப்குமார் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்திருந்த லால் சலாம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் மாதத்தில் ரிலீசாக உள்ளது.

Rajinikanth Lokesh kanagaraj tamil cinema

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வருகிறது. 73 வயதான நிலையிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சிறிது கூட ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படம் ரஜினி நடிப்பில் வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்றது. படம் சர்வதேச அளவில் 600 கோடிகளை வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்தது. மேலும் இந்த வெற்றியை ரஜினி, நெல்சன், அனிருத் உள்ளிட்ட பட குழுவினருடன் இணைந்து கொண்டாடியது. இவர்கள் மூவருக்கும் காஸ்ட்லியான காரை பரிசளித்தது.

வேட்டையன் ரிலீஸ் அப்டேட்: இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த லால் சலாம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே, அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படம் அக்டோபர் மாதத்தில் வெளியாக உள்ளதாக முன்னதாக லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படம் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி பட சூட்டிங்: முன்னதாக இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்த சூழலில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்றும் விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர், ட்ரெயிலர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பும் பல மாதங்களுக்கு முன்னதாக வெளியான சூழலில், படத்தின் சூட்டிங் ஜூலை மாதத்தில் துவங்க உள்ளதாக முன்னதாக தனது பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

கூலி குறித்து லோகேஷ்: இந்நிலையில் கூலி படத்தின் சூட்டிங் வரும் 10ம் தேதி துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் இதுவரை இல்லாத அளவில் அதிகமான ஆக்ஷன் காட்சிகளில் அவர் தூள் கிளப்பவுள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் முன்னதாக கூறிய சூழலில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் பிரமோ வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்திற்கு கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளதாகவும் முன்னதாக தன்னுடைய பேட்டியில் லோகேஷ் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X