சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா படத்தை கொண்டாடும் ரஜினி ஃபேன்ஸ்.. ஏன்னு பாருங்க மக்களே!

சென்னை: சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசிப் படமான தில் பெச்சாராவை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

லிப் டு லிப் கொடுக்கும் டாப்ஸி

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அவரது தற்கொலைக்கு பாலிவுட்டில் உள்ள வாரிசு அரசியல்தான் காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக நடித்த தில் பெச்சாரா படம் நேற்று வெளியானது.

ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள்

இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் தில் பெச்சாரா படம் குறித்து நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். ரஜினியின் ரசிகர்களும் தில் பெச்சாரா படத்தையும் சுஷாந்தையும் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி போன்று..

ரஜினி போன்று..

காரணம், தில் பெச்சாரா படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், ரஜினியின் தீவிர ரசிகராக நடித்திருப்பார். ரஜினிகாந்த் போன்று ஒரு நடிகராக வேண்டும் என்று ஆசைப்படுவார். அவரது நண்பரான ஜேபி இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் போன்று நடித்திருப்பார்.

சரி என்ற வார்த்தை

சரி என்ற வார்த்தை

தனது செல்போன் கவரில் கூட ரஜினியின் படத்தை ஒட்டி வைத்திருப்பார். நான் ரஜினியை வணங்குகிறேன் என்றும் கூறியிருப்பார். அதோடு தமிழில் இடம் பெறும் வார்த்தையான சரி என்ற வார்த்தையையும் அடிக்கடி பயன்படுத்தியிருப்பார்.

தலைவா..

தலைவா..

ரஜினியின் சிவாஜி பட காட்சியும் இடம் பெற்றிருக்கும்.
அதேபோல் ஒரே காட்சியில் வந்து செல்லும் சயிஃப் அலிகானும் ரஜினியை தலைவா என்று சொல்லி அவரது ஸ்டைலில் கண்ணாடியை கழட்டி போடுவார். இப்படி படம் முழுக்க சுஷாந்துடன் ரஜினியும் வியாப்பித்திருக்கிறார்.

சப் டைட்டிலுடன்

சப் டைட்டிலுடன்

இதனால் ரஜினி ரசிகர்களும் தில் பெச்சாராவை கொண்டாடி வருகின்றனர். சுஷாந்த் சிங் படத்தில் ரஜினிகாந்த் குறித்து பேசும் வசனங்களை சப் டைட்டிலுடன் இமேஜாக ஷேர் செய்து தங்களின் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியை வணங்குகிறேன்

ரஜினியை வணங்குகிறேன்

இந்த நெட்டிசன், படத்தில் இடம்பெற்ற ரஜினி குறித்து சுஷாந்து சிங் கூறும் நான் ரஜினிகாந்தை வணங்குகிறேன் என்ற டயலாக்கை குறிப்பிட்டு
தில் பேச்சராவில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உரையாடல் தலைவர் ரசிகர்களை வென்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X