Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பணம், புகழ் இருந்தாலும் 10 சதவிகிதம் கூட நிம்மதி இல்லாமல் வாழ்கிறார்கள்.. வருத்தப்பட்ட ரஜினிகாந்த்!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தில் தன்னுடைய தங்கைக்காக வில்லன்களை சிறப்பாக எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆன்மீகத்தில் மிகுதியான ஈடுபாடு கொண்டவர் ரஜினிகாந்த். அடிக்கடி இமயமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
சிரிச்சு முடியலப்பா...மேடையில் மாறி மாறி கலாய்த்துக் கொண்ட உதயநிதி - கிருத்திகா உதயநிதி

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரிய நடிகர். 70 வயதை தாண்டிய நிலையிலும், இன்னும் நாயகிகளுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். அதற்கேற்ப தன்னுடைய உடலை தொடர்ந்து மெயின்டெயின் செய்து வருகிறார். யோகா போன்ற பயிற்சிகள் இதற்கு ரஜினிக்கு உறுதுணையாக உள்ளன.

அண்ணாத்த படம்
கடந்த பொங்கலையொட்டி இவரது அண்ணாத்த படம் ரிலீசானது. இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மாமன் மகள்களாக மீனா, குஷ்பூ என களைகட்டியிருந்தது படம். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சிறப்பான வசூலை பெற்றது.

தலைவர் 169 படம்
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது அடுத்தப்படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகை நதியா, ரஜினிக்கு ஜோடியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரோக்கியம் குறித்து ரஜினிகாந்த்
இதனிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அதன் புத்தகத்தை வெளியிட்டு பேசினார். இந்த உலகத்தை விட்டு செல்லும்போது சொத்தை சேர்த்து வைத்துவிட்டு செல்வதைவிட நோயாளியாக இல்லாமல் செல்வது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிம்மதி 10 சதவிகிதம்கூட இல்லை
உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த், இங்கு அமர்ந்திருப்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் ஆனால் வாழ்க்கையில் பணம், புகழ், பெயர், பெரிய அரசியல்வாதிகளின் தொடர்பு எல்லாவற்றையும் பார்த்தவர்கள் 10% கூட வாழ்க்கையில் சந்தோஷமாக, நிம்மதியாக இருப்பதில்லை என வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

ரஜினி இமயமலை பயணம்
நடிகர் ரஜினிகாந்த், தொடர்ந்து இமயமலைக்கு ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு வந்தவர். அந்த இடத்தில் உள்ள ஒரு மூலிகையை சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு தேவையான எனர்ஜி கிடைக்கும் என்றும் அவர் இந்த பேச்சின்போது தெரிவித்துள்ளார். நிம்மதியை தேடித்தான் இத்தகைய பயணங்களை அவர் மேற்கொண்டார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிகிறது.