Nelson dilipkumar :ஜெயிலர் படத்தில் ரஜினி போர்ஷன்ஸ் ஓவர்.. அப்டேட் கொடுத்த நெல்சன்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது ஜெயிலர் படம்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது ஜெயிலர் படம். படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், தனது மகளின் இயக்கத்தில் உருவாகிவரும் லால் சலாம் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.

Actor Rajinikanth finishes his portions in Jailer movie

ஜெயிலர் சூட்டிங்கை நிறைவு செய்த ரஜினி : நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜெயிலர். விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தை கொடுத்திருந்தார் நெல்சன். அந்தப் படம் சொதப்பிய நிலையில், ஜெயிலர் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டிய கட்டாயம் நெல்சனுக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல ரஜினியின் சமீப கால படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் வகையில் அமையாத நிலையில், ஜெயிலர் படத்தை ரஜினி அதிகமாக நம்பியுள்ளார்.

பீஸ்ட் படத்தின்போதே ஜெயிலர் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை தொடர்ந்து, ரஜினி -நெல்சன் காம்பினேஷன் இணையுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இந்தக் கூட்டணி இணைந்து தற்போது படத்தின் சூட்டிங்கும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் சூட்டிங்கை சென்னை உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான ஜெயில் செட் போட்டு, நெல்சன் எடுத்து முடித்துள்ளார்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினியின் போர்ஷன்கள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதாக நெல்சன் திலீப்குமார் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 31ம் தேதியே ரஜினிகாந்த் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்றும் விரைவில் ரசிகர்களை சந்திக்க வருகிறோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

https://twitter.com/surbalu/status/1647892270253998080

அனிருத் இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் ஆகியவை மிகச்சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலங்களில் மல்டி ஸ்டாரர் படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் விக்ரம் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்ததாக விஜய், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட அதிகமான ஸ்டார்களை கொண்டு உருவாகி வருகிறது லியோ படம்.

இதனிடையே அந்த வரிசையில் ரஜினியின் ஜெயிலர் படமும் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வருகிறது. பான் இந்தியா படமாக உருவாகிவரும் ஜெயிலர் படத்தில் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். அந்த வகையில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில், சிவராஜ்குமார் ஆகியோர் படத்தில் இணைந்துள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் சூட்டிங் மங்களூர், கேரளா, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் படத்தை முடித்துக் கொடுத்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகிவரும் லால் சலாம் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் முதல் கட்ட சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங்கில் ரஜினி இணையவுள்ளார். படத்தில் அவர் முஸ்லிமாக நடிக்கவுள்ளதாகவும் அதற்காக நீண்ட தாடி வளர்க்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X