கை நிறைய கண்ணாடி வளையல் போட்டுவிட்டு கர்ப்பிணியின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி.. நெகிழ்ச்சி சம்பவம்!
சென்னை: நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் ஆசையை நடிகர் ரஜினிகாந்த் நிறைவேற்றியிருப்பது அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகம் முழுக்க ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நிச்சயம் நடிகர் ரஜிகாந்துக்கு ரசிகர்களும் இருப்பார்கள்.
வாழ்நாளில் ரஜினியை ஒரு முறை சந்தித்தால் போதும் என்று நினைக்கும் ரசிகர்களும் உண்டு. ரஜினிகாந்தும் தன்னை பார்க்க விரும்பும் ரசிகர்கள் குறித்த தகவலை அறிந்தால் வீட்டிற்கே அழைத்து மரியாதை செய்து வருகிறார் ரஜினிகாந்த்.

ரஜினி ரசிகை
இந்நிலையில் அப்படி ஒரு தீவிர ரசிகையின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அதாவது, சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ராகவா. இவரது மனைவி ஜெகதீஷ்வரி.

நிறைமாத கர்ப்பிணி
ஜெகதீஷ்வரி ரஜினியின் தீவிர ரசிகையாம். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஜெகதீஷ்வரி, ரஜினியை சந்திக்க வேண்டும் என கணவரிடம் கூறியிருக்கிறார்.

காத்திருந்த கணவர்
கர்ப்பிணி மனைவி ஆசைப்பட்டுவிட்டாரே எப்படியாவது நிறைவேற்றி வைக்க வேண்டும் என பல நாட்களாக போயஸ் கார்டன் பகுதியில் காத்திருந்திருக்கிறார் கணவர் ஜெகதீஷ்.

ஏதோ விஷயம் போல
ஒருமுறை அவரைப் பார்த்த ரஜினிகாந்த் என்ன விஷயம் என்று கேட்க, தனது மனைவி உங்களைப் பார்க்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார் ராகவா. ஆனால், ஏதோ ஒரு விஷயத்துக்காகத் தான் தன்னை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக எண்ணிய ரஜினிகாந்த் அதைப் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டார்.

விஷயத்தை சொன்ன கணவர்
இந்நிலையில் மீண்டும் ஒருமுறை ராகவாவை அப்பகுதியில் பார்த்த ரஜினிகாந்த் என்ன என்று மீண்டும் கேட்டுள்ளர். அப்போது தனது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், உங்களைப் பார்க்க வேண்டும் என்று விரும்புவதாகவும் விஷயத்தை கூறியிருக்கிறார் ராகவா.

முன்பே சொல்லியிருக்கக்கூடாதா?
இதற்காகத்தான் தான் தினமும் போயஸ் கார்டனில் தங்களது வீட்டின் முன்பு காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்ட ரஜினிகாந்த் இதை முன்பே சொல்லியிருக்கக்கூடாது? என கேட்டுவிட்டு தம்பதியை உடனடியாக நேரில் சந்தித்துள்ளார்.

கண்ணாடி வளையல்
அப்போது ஜெகதீஸ்வரிக்கு தன் கைகளால் கண்ணாடி வளையல் அணிவித்து அவரது ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார் ரஜினிகாந்த். மேலும் அவர்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.
வைரலாகும் போட்டோஸ்
கர்ப்பிணி பெண்ணின் ஆசையை நடிகர் ரஜினிகாந்த் நிறைவேற்றியுள்ள சம்பவம் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. கர்ப்பிணி பெண்ணுக்கு ரஜினிகாந்த் வளையல் போட்டுவிடும் போட்டோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











