Rajinikanth: மலேசியாவை தொடர்ந்து அமெரிக்க பயணத்திற்கு தயாராகும் ரஜினி.. என்ன விஷயம் தெரியுமா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 10ம் தேதி ரிலீசான ஜெயிலர் படம் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்று 700 கோடி ரூபாய் அளவில் வசூலித்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், தற்போது ஞானவேல் இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைவர் 171 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார் சூப்பர்ஸ்டார்.

மலேசியாவை தொடர்ந்து அமெரிக்க பயணத்திற்கு தயாராகும் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடத்ந மாதம் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசானது ஜெயிலர் படம். இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக மாஸ் காட்டியிருந்தார் ரஜினி. துவக்கத்தில் ரிடையர்ட் ஜெயிலராக வீட்டில் அன்றாட வேலைகளை செய்யும் ரஜினியாகட்டும், மகன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக நினைத்து, அதற்கு காரணமானவர்களை பழிவாங்கும் ரஜினியாகட்டும், தன்னுடைய மகனின் உண்மை முகம் தெரிந்து தன்னுடைய இயலாமையை காட்டும் ரஜினியாகட்டும் மாஸ் காட்டியிருந்தார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சன் பிக்சர்சின் தயாரிப்பிலேயே தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. கிரிக்கெட் சம்பந்தப்பட்ட இந்தப் படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் நடித்துள்ளார் ரஜினி. படத்தின் சூட்டிங் மும்பை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது.
தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் கமிட்டாகியுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டுள்ளது. படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளார். லால் சலாம் படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் இஸ்லாமியராக ரஜினி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு திடீரென மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. திடீரென இந்த சந்திப்பு நிகழ்ந்த நிலையில், உடனடியாக அன்றிரவே சென்னை திரும்பியுள்ளார் ரஜினிகாந்த். அவருடைய இந்த பயணத்தின்போதுதான் தலைவர் 171 படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையொட்டி தன்னுடைய மகிழ்ச்சியை லோகேஷ் பகிர்ந்த நிலையில், ரஜினிகாந்த் ஊரிலேயே இல்லாதது ரசிகர்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக நவம்பர் மாதத்தில் அமெரிக்காவிற்கு பயணமாகவுள்ளார் ரஜினிகாந்த். மலேசிய பயணம் ஒரே நாளில் நிறைவடைந்த நிலையில், அமெரிக்க பயணம் ஒரு மாதம் வரை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ஒருமுறை தன்னுடைய சிகிச்சைக்காக ரஜினிகாந்த் அமெரிக்காவிற்கு செல்வது வழக்கமாக நடப்பதுதான். இந்நிலையில் ஞானவேல் படத்தின் சூட்டிங் இந்த பயணத்தால் பாதிப்படையுமா என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











